அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அம்பேத்கர் பிறந்தநாள் பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு இயங்களைச் சேர்ந்தவர்களும் அம்பேத்கர் சிலைகளுக்கு ஆங்காங்கே மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
Must Read : நெடுஞ்சாலைக்கு சூட்டப்பட்டிருந்த பெரியார் பெயர் நீக்கப்பட்டதை தொடர்ந்து அண்ணா, காமராஜர் பெயரும் நீக்கம்: டிடிவி தினகரன் கண்டனம்
இந்நிலையில்,
அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பதிவில், “அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும் என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்ன சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த தினம் இன்று. அமல்படுத்துபவர்களை நோக்கிக் குரலெழுப்புவோம்” என குற்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.