சில தினங்களுக்கு முன்னர் அரியலூரில் நீட் அச்சம் காரணமாக விக்னேஷ் என்ற மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், இன்று மதுரையில் ஒரு மாணவி அதே காரணத்துக்காக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மநீம தலைவர் கமல்ஹாசன், "மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன?" என்றார்.
Also read: நீட் அச்சத்தால் மதுரை மாணவி உயிரிழப்பு: தற்கொலை செய்யும் முடிவை மாணவர்கள் கைவிட வேண்டும் - விஜயகாந்த் அறிக்கை
தொடர்ந்து கூறுகையில், ”மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை!" என்று கூறியுள்ளார்.