பிப்ரவரி 21-ம் தேதி புதிய அரசியல் கட்சி தொடங்கும் கமல்ஹாசன், தனது சுற்றுப் பயண விபரங்களை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடிகர்கள் பலரும் அரசியலில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி மற்றும் கமல் இருவரும் அரசியல் பிரவேசத்திற்கு தயாராகி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறி தனது அரசியல் பயணத்திற்கு அச்சாரம் இட்டார். கடந்த டிசம்பர் 31-ம் தேதி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். அதோடு ரஜினி ரசிகர் மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றமும் செய்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக ரஜினி ஏற்கனவே அறிவித்துள்ளார். அதேபோல் உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமல், தான் ஏற்கனவே வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக, பல தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று வருகிறார். இந்நிலையில் வரும் 21-ம் தேதி தனது ‘நாளை நமதே’ பயணத்தை தொடங்குகிறார்.
பிப்ரவரி 21-ம் தேதி காலை 7:45 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்துக்கு செல்லும் கமல்ஹாசன், காலை 11:10 மணிக்கு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடத்திற்கு செல்கிறார். நண்பகல் 12:30 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை நுழைவு வாயிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், பிற்பகல் 2:30 மணிக்கு பரமக்குடி ஐந்துமுனை சாலையில் லேனா மஹாலில் நடைபெறும் கூட்டத்திலும் அவர் கலந்துக் கொள்கிறார். மாலை 6:00 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் தமது புதிய கட்சியின் கொடியேற்றி வைத்து பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் உரையாற்றுகிறார்.
கமல்ஹாசனின் சுற்றுப்பயண விவரங்கள்:
பிப்.21: காலை 7:45 மணிக்கு அப்துல் கலாம் இல்லத்துக்கு கமல் செல்கிறார்
பிப்.21: காலை 11:10 மணிக்கு அப்துல் கலாம் நினைவிடத்திற்கு செல்கிறார்
பிப்.21: நண்பகல் 12:30 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயிலில் பொதுக்கூட்டம்
பிப்.21: பிற்பகல் 2:30 மணிக்கு பரமக்குடியில் கூட்டம்
பிப்.21: மாலை 6:30 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் கொடியேற்றம்
பிப்.21: இரவு 8:10 முதல் 9:00 மணி வரை பொதுக்கூட்டம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: APJ Abdul Kalaam, Kamal Haasan, Political party, Rajinikanth, Ramanathapuram, Rameshwaram