காமராஜர் மடியில் வளர்ந்தவன் நான் - கமல்ஹாசன் பேச்சு

காமராஜர் அவர்களை கிங் மேக்கர் என்று சொல்வதைவிட கண்ட்ரி மேக்கர் என்று சொல்லலாம். ஏனென்றால் அவர்தான் நாட்டை உருவாக்கிய சிற்பி என்று கமல் கூறினார். (படங்கள்: வெங்கடேசன்)

காமராஜர் மடியில் வளர்ந்தவன் நான் - கமல்ஹாசன் பேச்சு
கமல்ஹாசன்
  • News18
  • Last Updated: July 22, 2019, 2:21 PM IST
  • Share this:
காமராஜர் மடியில் வளர்ந்தவன் நான் என்று திருப்பத்தூரில் நடந்த விழாவில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 117-ம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவினை மக்கள் நீதி மைய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

அப்போது விழாவில் பேசியவர், “நான் மக்கள் நீதி மய்ய தலைவனாக வரவில்லை. காமராஜரின் தொண்டனின், ரசிகனின் மகனாகதான் கலந்து கொண்டிருக்கிறேன். காமராஜர் மடியில் வளர்ந்தவன் நான்.


எனக்கு ரொம்ப பிடித்தமான தலைவர் மகாத்மா காந்தி. அவருக்கு அடுத்தபடியாக எனக்கு ரொம்ப பிடித்த தலைவர் காமராஜர். இவர் அனைவருக்கும் கல்வி என்னும் திட்டத்தை கொண்டு வந்தவர். ஆனால் தற்போது இது ஒரு சிலருக்கு மட்டுமே என்று ஒதுக்கப்பட்டுள்ளது.

காமராஜர் அவர்களை கிங் மேக்கர் என்று சொல்வதைவிட கண்ட்ரி மேக்கர் என்று சொல்லலாம். ஏனென்றால் அவர்தான் நாட்டை உருவாக்கிய சிற்பி” என்றார்.

விழாவில் பேசிய கமல்ஹாசன்
அதனைத் தொடர்ந்து பேசியவர், “ எழுத்துக்கூட்டிப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் நினைத்துப் பார்க்க வேண்டிய பெயர் திரு. காமராஜர். காமராஜர் அவர்கள் ஆரம்பித்து வைத்த அற்புதக் கனவை யாரும் இடைஞ்சல் செய்து கலைத்து விடக்கூடாது. அனைவருக்கும் கல்வி என்று காமராஜர் அவர் எண்ணி திட்டம் தீட்டினார். அப்படிப்பட்ட கல்வி ஒரு சிலருக்கு மட்டும் என்று ஒதுக்கிவிடக்கூடாது.

கல்வி அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டும். ஆனால் இன்று கல்விக்காக தேர்வு எழுதுவதற்கு கூட பக்கத்து மாநிலத்திற்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கின்றது. இதை இங்கிருக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் இணைந்து மாற்றிட வேண்டும்.

காமராஜர் அவர்களின் கனவு பெருங்கனவு, அக்கனவினை கலையாமல் செயல்படுத்திட அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்றிட வேண்டும். சட்டங்களை திருத்தும் அரசுகளும் இதற்காக செயல்பட வேண்டும். அத்துடன் எனது குரலும் தொடர்ந்து ஒலிக்கும்” என்று கூறினார்.

கமல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்ட முயற்சி செய்த இந்து அமைப்பை சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்