நாங்கள் தமிழகத்தை துப்புரவு செய்ய வந்த துப்புரவு தொழிலாளிகள் - கமல்ஹாசன்

கமல்ஹாசன்

சாக்கடையாகி போன அரசியலை துப்புரவு செய்ய வந்த துப்புரவு தொழிலாளிகள் நாங்கள் எனவும் எங்களை தலைவர்களாக பார்க்கவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

  • Share this:
சாக்கடையாகி போன அரசியலை துப்புரவு செய்ய வந்த துப்புரவு தொழிலாளிகள் நாங்கள் எனவும் எங்களை தலைவர்களாக பார்க்கவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட உப்பிலிபாளையம் பகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது நாங்கள் ஆட்சியை பிடிக்க போவது சம்பாதிப்பதாக அல்ல மக்கள் பணி செய்வதற்காக என தெரிவித்தார்.

60 ஆண்டுகளாக என்னை நட்சத்திர அந்தஸ்து வைத்திருந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அரசியலுக்கு வந்திருக்கின்றேன் என கூறிய அவர், அரசியல் சாக்கடை என பலர் சொல்லி தடுத்தார்கள் என தெரிவித்தார்.

ஆனால் நான் மதிக்கும் முன்னோர்கள் இருந்த அரசியல் எப்படி சாக்கடையாக இருக்கும் என கேள்வி கேட்டு வந்தவன் நான், அரசியல் சாக்கடையாக்கப்பட்டுள்ளது இதை மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

மக்களுக்காக செய்யும் வேலையை சாக்கடையில் இறங்கி செய்ய வேண்டுமானால் அதையும் செய்யலாம் என நாங்கள் இறங்கியிருக்கின்றோம், தமிழகத்தை துப்புரவு செய்ய வந்த துப்புரவு தொழிலாளிகள் நாங்கள், எங்களை தலைவர்களாக பார்க்கவில்லை, எங்களை கருவிகாளாக்கி கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

மேலும் நான் நடிகன் என்பதால் யார் நடிக்கின்றார்கள் என்பது எனக்கு தெரியும், நான் சொல்கின்றேன் இவ்வளவு நாளாக ஆண்ட அரசியல்வாதிகள், அவர்கள் நடிக்கின்றார்கள், சம்பாதிக்கும் காசுக்கு கூட அவர்களுக்கு நடிக்க தெரியவில்லை என தெரிவித்தார். தமிழகத்தை உலகம் திரும்பி பார்க்கவேண்டும் என்பது என் ஆசை என கூறிய கமல்,சீனா 35 ஆண்டுகளுக்கு முன்பு மோசமாக இருந்தது, அதை அப்படியே மாற்றி விட்டனர் எனவும் தமிழகத்திலும் மாற்றத்தின் விதையை தூவ ஆரமித்து விட்டோம் எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Must Read : பாஜக பூச்சாண்டி... நான் இந்தியாவிற்கே தமிழ்நாடு என்று பெயர் வைப்பேன் - சீமான் கொந்தளிப்பு

 

அப்போது, கூட்டத்தில் கட்சி தொண்டரின் குழந்தைக்கு “நட்சத்திரா” என கமல்ஹாசன் பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: