கமல்ஹாசன் நலம்பெற வேண்டி பழக்கூடை அனுப்பிய பாஜக பிரபலம்

கமல்ஹாசன்

அறுவை சிகிச்சை செய்த காலில் கமல்ஹாசனுக்கு மீண்டும் வலி ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர் நலம் பெற வேண்டி பழக்கூடை அனுப்பியுள்ளார் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்

 • Share this:
  முதல்முறையாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன். தனது தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர் இன்று காலை கோவை பூ மார்க்கெட்,  ஆர்எஸ் புரம் பகுதி உள்ளிட்ட இடங்களில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

  அப்போது அவருடன் பேசவும், தற்படம் எடுத்துக் கொள்ளவும் ஆர்வத்துடன் பொதுமக்கள் கூடினர். அப்போது யாரோ தவறுதலாக கமல்ஹாசனின் காலை மிதித்து விட்டனர். சமீபத்தில்தான் அறுவைச் சிகிச்சை செய்த காலில் மீண்டு அடிபட்டதால்,  உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று எக்ஸ் ரே எடுக்கப்பட்டது.

  காலில் வீக்கம் இருப்பதால், ஓய்வு அவசியம்  தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவரது பிரசார திட்டங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன. ஆனால் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்நிலையில் தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வரும் கமல்ஹாசன் நலம்பெற வேண்டி அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசன் பழக்கூடை அனுப்பி வைத்துள்ளார். பா.ஜ.க மாவட்டத் தலைவர் நந்தகுமார் மூலம் பழக்கூடை கொடுத்து அனுப்பப்பட்டுள்ளது.
  Published by:Sheik Hanifah
  First published: