வேலூரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: கமல்ஹாசன்

ரஜினி ஆதரவு தருவதாக கூறியுள்ளார் அவ்வளவுதான். அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த இயலாது என்றும் கமல் தெரிவித்துள்ளார்.

வேலூரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: கமல்ஹாசன்
கமல் ஹாசன்
  • News18
  • Last Updated: April 4, 2019, 10:44 AM IST
  • Share this:
வேலூரில் தேர்தல் ரத்துசெய்ய வேண்டும் என்பதை மக்கள் நீதி மையம் பரிந்துரைப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசும் போது, ‘‘இந்தத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். செல்லும் இடமெல்லாம் அன்பில் நீந்த வாய்ப்பு கிடைக்கிறது. மக்கள் செலுத்தும் அன்பைக் காணும் போது எங்களுக்கு பொறுப்பும், கடமையும் அதிகமாகியிருக்கிறது.

10 கொலைகள் செய்தால் கொலை சாதாரணம் ஆகிவிடுகிறது. அதுபோல 10 இடங்களில் பணம் பிடிபட்டால் அதுவும் சாதாரணமாகி விடுகிறது. ஆனால் அது சாதாரணமாக ஆகக் கூடாது.என் கட்சியில் இருப்பவர்களுக்கு நான் அறிவுறுத்துவது நாம் அதை செய்யக்கூடாது. செய்பவர்களை தேர்தல் ஆணையத்திடம் காட்டிக்கொடுப்பேன் என்று மிரட்ட வேண்டும்.


நாம் எல்லோருமே இங்கு திராவிடர்கள் தான். அது இரு கட்சிகள் மட்டுமே பகிர்ந்து எடுத்துக்கொள்ளும் ஒரு விஷயம் அல்ல. அது ஒரு இனக்குறிப்பு. என்னுடைய தேர்தல் அறிக்கையும் திமுகவின் தேர்தல் அறிக்கையும் ஒரே போல் இருந்தால் அதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் கொண்டுவந்த உழவர் சந்தை திட்டம் காற்றில் பறந்துவிட்டது. அந்தத் திட்டத்தை எடுத்து நாம் சரியாக கொண்டு செல்வோம்.

தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவது ஏற்க முடியாது. அவர்கள் இன்னும் அழுத்தமாக செயல்பட வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது காவல்துறையும் ஏவல் துறையாக மாறும், அவர்கள் மாறாமல் இருக்க வேண்டும்.

ரஜினி ஆதரவு தருவதாக கூறியுள்ளார் அவ்வளவுதான், அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த இயலாது. வேலூரில் தேர்தல் ரத்து செய்ய வேண்டும் என்பதை தான் மக்கள் நீதி மையம் பரிந்துரைக்கிறது’’ என்று கமல்ஹாசன் பேசினார்.Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:

ன்ஃப்க்ஹ்ன்hgdfghg

SCHEDULE TIME TABLE:
First published: April 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading