மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தொடர் இழுபறி

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தொடர் இழுபறி

கமல்ஹாசன்-சரத்குமார்

கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடிப்பதால் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் தேதியை தள்ளி வைத்தது மக்கள் நீதி மய்யம்.

  • Share this:
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

கூட்டணி தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரமாக அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருக்கிறார்.

அமமுக உடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில் அதை மநீம கட்சியின் பொது செயலாளர் குமரவேல் மறுத்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் 7-ம் தேதி முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என கமல்ஹாசன் அறிவித்தார். ஆனால் அதன்பின் சமக, ஐ.ஜே.கே உடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இப்போது வரை உடன்பாடு எட்டப்படவில்லை. இன்று மாலை கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என மநீம கட்சியின் பொது செயலாளர் குமரவேல் மதியம் அறிவித்தார்.

ஆனால் மாலை வரை கட்சி தலைவர்கள் யாரும் அலுவலகம் வரவில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் முரண்கள் நீடிப்பது உறுதியாகிறது. மீண்டும் நாளை காலை பேச்சுவார்த்தை நடைபெறும் என மநீம கட்சியினர் அறிவித்துள்ளனர். இதனால் இன்று அறிவிப்பதாக இருந்த மநீம வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை. மார்ச் 10-ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: