மக்கள் நீதி மய்யம் கட்சியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் இணைக்கவுள்ளதாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியான செய்தி அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக வலைதளத்தில் வெளியான அந்த அறிக்கையில், “மகாத்மா காந்தி இந்துத்துவ வெறியரால் கொல்லப்பட்ட நாளான ஜனவரி 30-ம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் கட்சியானது காங்கிரஸுடன் இணைக்கப்படுவதாகவும், கமல்ஹாசன் மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் டெல்லியில் இந்த இணைப்பு விழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் கமல்ஹாசன் முன்னாள் காங்கிரஸ் தலைவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பியதிலிருந்து தனது அடுத்த நகர்வுகளை யோசித்து வந்ததாகவும், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளுடன் பல்வேறு சுற்று விவாதங்கள் மற்றும் ஆலோசனைக்குப் பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குடியரசு தினத்தை கொண்டாடிய ஒரு நாள் கழித்து இன்று ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைய முடிவு செய்துள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுவதாகவும் பதிவிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து இந்த செய்தி குறித்து சில ஊடங்களிலும், சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில் இந்த தகவல் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மறுக்கப்பட்டுள்ளதுடன் இதுகுறித்து விளக்கமும் வெளியாகியுள்ளது. அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 27, 2023
இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.