• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Kamal Haasan : கோவை தெற்கில் மநீம தலைவர் கமல்ஹாசன் முன்னிலை

Kamal Haasan : கோவை தெற்கில் மநீம தலைவர் கமல்ஹாசன் முன்னிலை

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை 75 மையங்களில் நடைபெறுகின்றது. ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 4 முதல் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்படி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.

  • Share this:
    தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை 75 மையங்களில் நடைபெறுகின்றது. ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 4 முதல் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்படி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.

    தமிழக சட்டமன்ற தேர்ததில் தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முதல் சுற்றில் 1391 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 1345 வாக்குகள் பெற்றுள்ளார்.

    கும்பகோணத்தில் அதிமுக வேட்பாளரும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவருமான ஸ்ரீதர் வாண்டையார் முன்னிலை பெற்றுள்ளார். 14 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

    கடலூர் சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி எண்ணப்பபட்டு வரும் நிலையில் அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத் முன்னிலையில் உள்ளார்.

    தென்காசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் முன்னிலையில் உள்ளார்.

    தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.அறிவுடைநம்பி முன்னிலை . தாராபுரத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலை பெற்றுள்ளார்.

    நன்னிலம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் காமராஜ் தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருக்கிறார். ஆரணியில் அதிமுக வேட்பாளர் சேவூர் ராமசந்திரன் முன்னிலையில் உள்ளார்.

    கோவில்பட்டியில் டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்தள்ளார். அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ முன்னிலை பெற்றுள்ளது.

    Must Read :  Tamil Nadu Assembly Election Results 2021 Live Updates: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தபால் வாக்குகள் நிலவரம்

     

    கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார். வேளச்சேரி தொகுதி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் அசோக் பின்னடைவை சந்தித்துள்ளார். 65 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: