மநீம செயல் திட்டம் குறித்த அறிவிப்பு இனி வாரந்தோறும் வெளியாகும் - கமல்ஹாசன்!

மநீம செயல் திட்டம் குறித்த அறிவிப்பு இனி வாரந்தோறும் வெளியாகும் - கமல்ஹாசன்!

கமல்ஹாசன்

கடலூர் மாவட்டத்துக்கு சென்ற கமல்ஹாசன், தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், வேன் ஓட்டுநர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் கலந்துரையாடினார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மக்கள்நீதி மய்யத்தின் செயல் திட்டங்கள் குறித்த அறிவிப்பு இனி வாரந்தோறும் வெளியாகும் என மக்கள்நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட பிரச்சார பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஈடுபட்டார். அங்கு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் தமிழகத்தில் உள்ள அனைவரையும் ஏழு அம்ச திட்டங்களில் படிப்படியாக கொண்டுவருவோம் என தெரிவித்தார்.

  இரண்டு வருடங்களுக்கு முன்பே திட்டங்கள் தயாராகிவிட்டதாக தெரிவித்த கமல்ஹாசன், மற்றவர்கள் தங்களது திட்டத்தை காப்பி அடிக்காமல் இருப்பதற்காக இத்தனை நாட்களாக வெளியிடாமல் இருந்தோம் என்றார்.

  இனி வாரந்தோறும் ஏழு அம்ச திட்ட அறிவிப்புகள் வெளியாகும் என்று கமல் கூறினார். வெள்ளைக்காரர்கள் போய் தற்போது கொள்ளைக்காரரர்கள் வந்துவிட்டதாக கூறிய கமல், நல்லாட்சி மலர மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

  Also read... இங்கிலாந்திலிருந்து தமிழகம் வர கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்...!

  இந்நிலையில், கடலூர் மாவட்டத்துக்கு சென்ற கமல்ஹாசன், தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், வேன் ஓட்டுநர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் கலந்துரையாடினார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னை யாராலும் பின்னிருந்து இயக்க முடியாது என்று தெரிவித்தார். அதிமுக-வும், திமுகவும் மாறி மாறி தெரிவிக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை மக்கள் நீதி மய்யம் கட்சி திரட்டும் என்று கமல்ஹாசன் கூறினார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: