Cyclone Nivar | புயலை தாங்கும் அளவுக்கு சென்னை மாறினாலும், பாராட்டும் அளவுக்கு இல்லை - கமல்ஹாசன்..

கமலஹாசன்

சைதாப்பேட்டை ஆற்றங்கரையோரம் வாழும் இப்பகுதி மக்களுக்கு மழை காலத்தில் உதவி செய்வதை விட அவர்களுக்கு தகுந்த இடத்தில் வீடு தர வேண்டும் என கமல் ஹாசன் கூறினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயல் நிவாரணமே மக்களுக்கு இன்றளவும் கிடைக்கவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

நிவர் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சைதாப்பேட்டை தாடன்டர் நகர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,சைதாப்பேட்டை ஆற்றங்கரையோரம் வாழும் இப்பகுதி மக்களுக்கு  மழை காலத்தில் உதவி செய்வதை விட அவர்களுக்கு தகுந்த இடத்தில் வீடு தர வேண்டும் என கூறினார். நிவாரணம் என்பதை விட அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற  வேண்டும் என தெரிவித்தார்.

Also read... தண்ணீரால் சூழப்பட்ட சென்னை மாநகராட்சி அலுவலகம்



நிவர் புயலில் அரசு எடுத்த நடவடிக்கை எப்படி பார்க்கிறிர்கள் என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த கமல், அரசு எச்சரிக்கையாக இருந்துள்ளது என்பதை விட தங்களால் எச்சரிக்கை அடைந்துள்ளதாக கூறினார்.

கஜா புயலுக்கான நிவாரணமே மக்களுக்கு கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டிய கமல்ஹாசன், ”தேர்தல் அவசரத்திலாவது மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும்” எனவும் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published: