கருணாநிதியை அவமானப்படுத்த மு.க.ஸ்டாலின் என்று சொன்னாலே போதுமானது - கமல் காட்டம்

கமல்ஹாசன்

கருணாநிதியை அவமானப்படுத்த மு.க.ஸ்டாலின் என்று சொன்னாலே போதுமானது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

  • Share this:
சர்வதேச பெண்கள் தினத்தை ஒட்டி சென்னை கிண்டியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் தின கொண்டாட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நான் சக்கர நாற்காலி பற்றி பேசி கருணாநிதியை அவமானப்படுத்திவிட்டதாக சொல்கிறார்கள். எனக்கு அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்றார். அப்படி அவரை அவமானப் படுத்த வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலின் என்று சொன்னாலே போதுமானது என்று பேசினார்.

நிகழ்ச்சி முடித்து வெளியே வந்த கமல்ஹாசனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தனிநபர் தாக்குதல் இல்லாமல் இப்போது யார் அரசியல் செய்கிறார்கள்? என்னை எல்லோரும் தாக்குகிறார்கள். அவர்களுக்கு நான் திருப்பி செய்கிறேன் என்றார்.

பிப்ரவரி 21-ம் தேதி மக்கள் நீதிமய்யத்தின் 4-ம் ஆண்டு தொடக்கவிழாவில் உரையாற்றிய கமல்ஹாசன், நான் அடுத்த 5 வருடத்தில் ஆரோக்கியமாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அடுத்த 10 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும். கடைசி காலத்தில் வீல் சேரில் வந்து மக்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை” என்றார். கமலின் இந்த பேச்சு முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியை விமர்சிப்பதாக இருப்பதாகக் கூறி திமுகவினர் கணடன குரல் எழுப்பினர்.

இதையறிந்த கமல்ஹாசன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் விளக்கமளித்திருந்தார். அதில், “நான் என்னுடைய முதுமையை பற்றியே பேசினேன். மறைந்த தலைவர் கருணாநிதி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவர் இருந்திருந்தால் நான் பேசியதின் உள்ளர்த்தம் அவருக்கு தெரிந்திருக்கும். வயோதிகத்தையும், சக்கர நாற்காலியையும் கேலி செய்யுன் விதமாக நான் பேசும் வாய்ப்பே கிடையாது. சக்கர நாற்காலியில் அவர் அமர்ந்திருந்த போது அதை பிடித்து தள்ளிக் கொண்டு வந்தவர்களில் நானும் ஒருவன். நான் என்ன செய்வேன், செய்யமாட்டேன் என்று தான் என்னுடைய பேச்சில் சொல்லிக் கொண்டிருந்தேன்.” என்று கூறியிருந்தார்.
Published by:Sheik Hanifah
First published: