Home /News /tamil-nadu /

மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு வாய்ப்பு இல்லையே தவிர மறுக்கப்படவில்லை - கமல்ஹாசன்

மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு வாய்ப்பு இல்லையே தவிர மறுக்கப்படவில்லை - கமல்ஹாசன்

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

தமிழக மக்கள் குரல் மக்களவையில் ஒலிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
மத்திய அமைச்சரவை பட்டியலில் தமிழகத்திற்கு இடம் ஒதுக்காதது வாய்ப்பில்லை என்பதைதான் காட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படவில்லை என்பது குறித்த கேள்விக்கு, இதன் மூலம் வாய்ப்பு இல்லை என்பதைதான் பார்க்க முடிகிறது. இடம் மறுக்கப்பட்டுள்ளது என்பதாக தெரியவில்லை என்று கூறினார்.

மேலும் தமிழகத்திற்கு இடம் கிடைக்கும் என முதல்வர் முதற்கொண்டு அனைவரும் நம்பிக்கையோடு இருந்த நிலையில் தற்போது ஏமாற்றம் அளித்துள்ளது என்ற கருத்துக்கு பதில் அளித்த கமல், தமிழக மக்கள் குரல் அந்த சபையில் ஒலிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கை என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி அடுத்த மத்திய அமைச்சரவை பட்டியலில் தமிழகத்திற்கு இடம் கிடைக்கும் என தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறிய கருத்துக்கு, இதை தேர்தல் வாக்குறுதி போல்தான் பார்க்க வேண்டும் என அவர் கூறினார்.

Also see...  மத்திய அமைச்சரானார் தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர்!

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: Kamal hassan, Trichy

அடுத்த செய்தி