கோவையில் பாஜக பேரணியின்போது கடை மீது கல் வீச்சு: அதே கடையில் புதிய செருப்பு வாங்கிய கமல்

கோவையில் பாஜக பேரணியின்போது கடை மீது கல் வீச்சு: அதே கடையில் புதிய செருப்பு வாங்கிய கமல்

கமல்ஹாசன்

கோவையில் பாஜகவினர் நடத்திய இரு சக்கர வாகன பேரணியின்போது செருப்பு கடை மீது கல் வீசி தாக்கப்பட்ட நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அந்த கடைக்குச் சென்று புதிய செருப்பு வாங்கினார்.

 • Share this:
  கோவையில் பாஜகவினர் நடத்திய இரு சக்கர வாகன பேரணியின்போது செருப்பு கடை மீது கல் வீசி தாக்கப்பட்ட நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அந்த கடைக்குச் சென்று புதிய செருப்பு வாங்கினார்.

  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

  இந்நிலையில், கோவை டவுண்ஹால் பகுதியில் நேற்று பாஜகவினர் நடத்திய இரு சக்கர வாகன பேரணியின்போது செருப்பு கடை ஒன்றின் மீது கல் வீசி தாக்கப்பட்டது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை டவுண்ஹால் பகுதிக்குச் சென்றார். அங்கே கல் வீசி தாக்கப்பட்ட கடைக்குச் சென்ற அவர், கடை உரிமையாளர்களிடம் சிறிது நேரம் உரையாடினார். பின்னர் அதே கடையில் புதிய செறுப்பு ஒன்றை வாங்கினார்.

  கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் களம் காணும் கமல்ஹாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

  Must Read : எடப்பாடி பழனிசாமியும் மு.க.ஸ்டாலினும் ஒரேநாளில் கோவையில் பிரச்சாரம்

  கோவை தெற்கு தொகுதியில், பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமாரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தரப்பில் சேலஞ்சர் துரையும், நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வகாப் ஆகியோரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: