லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்துவரும் விக்ரம் படத்தின் சென்னை ஷெட்யூல்டில் கமல் கலந்து கொண்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல கட்டங்களாக விக்ரம் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பொள்ளாச்சியில் எடுப்பதாக இருந்த காட்சியை கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சென்னையில் எடுப்பதாக முடிவானது. அவர் தவிர்த்த காட்சிகளை லோகேஷ் கனகராஜ் டிசம்பர் 10 முதல் படமாக்கி வந்தார். இந்நிலையில், நேற்று சென்னையில் நடந்த படப்பிடிப்பில் கமல் கலந்து கொண்டார்.
இந்த சென்னை ஷெட்யூல்ட் முக்கியமாக கருதப்படுகிறது. இந்த ஷெட்யூல்டில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் மூவரும் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது. அந்த செய்திக்குறிப்பில், திரைப்படம் கோடை விடுமுறையின் போது திரைக்கு வரவிருப்பதால் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் அவரது அணியினரும் இரவு பகல் இடைவெளி விடாமல் உழைத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#ACTION from the sets of VIKRAM#Vikram_release_onsummer2022 #Vikram #KamalHaasan @ikamalhaasan @VijaySethuOffl #FahadhFaasil pic.twitter.com/9cWlmshrbb
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 22, 2021
கொரோனா தொற்றுக்குப் பின் கமல் நேற்று தான் விக்ரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஓய்வு எடுத்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் படப்பிடிப்பில் கமல் கலந்து கொண்டதாக அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கமலுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு தடைபட்டதை சுட்டிக் காட்டி, படம் திட்டமிட்டபடி கோடை விடுமுறையில் வெளிவராது என்று கிளம்பிய வதந்தியை இந்த செய்திக் குறிப்பின் மூலம் கமலும், விக்ரம் படக்குழுவும் பொய்யாக்கியுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.