பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்.. விலையிறங்குவாயா வெங்காயமே? - கமல்ஹாசன் ட்வீட்

வெங்காயம் விலை மேலும் உயர்ந்தால், நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.  

பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்.. விலையிறங்குவாயா வெங்காயமே? - கமல்ஹாசன் ட்வீட்
கமல்ஹாசன்
  • Share this:

பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார். விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார். விலையிறங்குவாயா வெங்காயமே? என வெங்காய விலை உயர்வு குறித்து ட்வீட் செய்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.கோவையில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

வெங்காயம் விலை மேலும் உயர்ந்தால், நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading