டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு....

முக்கொம்பு மேலணையிலிருந்து காவிரியில் சீறிப்பாய்ந்து வரும் தண்ணீர்

டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் இன்று திறக்கப்படுகிறது

 • Share this:
  டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணையை கடந்த ஜூன் 12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அணைக்கு நேற்று மாலை தண்ணீர் வரத்து விநாடிக்கு 892 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பை கடந்து, கல்லணையை வந்தடைந்தது. இதையடுத்து கல்லணையிலிருந்து நீர் பாசனத்திற்காக தண்ணீர் இன்று திறக்கப்பட உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் படிக்க... Child Care | கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்ச ரூபாய் செலுத்தும் திட்டம்... இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

  இந்த நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்ட பங்கேற்கின்றனர். கல்லணையிலிருந்து வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
  Published by:Vaijayanthi S
  First published: