Home /News /tamil-nadu /

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் - பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் - பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

டிஜிபி சைலேந்திர பாபு

டிஜிபி சைலேந்திர பாபு

சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வன்முறையில் ஈடுபடுத்தப்பட்டது தொடர்பாக தனி விசாரணை மேற்கொள்ளப்படும் - தமிழ்நாடு காவல்துறை ஆணையர்

    கள்ளக்குறிச்சியில் மாணவியின் மரணம் தொடர்பாக அப்பள்ளியின் தாளாளர், முதல்வர், செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி பள்ளியின் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த கொடுமையான சம்பவம் கடந்த 13ம் தேதி நடைபெற்ற நிலையில், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் பொது மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால், இன்றைய போராட்டம் வன்முறை களமாக மாறியது. பள்ளி உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. காவல்துறையின் விசாரணை முடிவில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்த நிலையிலும், பொது அமைதி திரும்பவில்லை. இதனையடுத்து, கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம், நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதையும் வாசிக்ககள்ளக்குறிச்சி மாணவி மரணம்: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.. அமைதி காக்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

    இந்நிலையில்,  செய்தயாளர்களை சந்தித்த காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு கூறும்போது, " மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி நீதி விசாரணை மேற்கொள்ளும். இதுதொடர்பாக, அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் , முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வன்முறையில் ஈடுபடுத்தப்பட்டது தொடர்பாக தனி விசாரணை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Kallakurichi

    அடுத்த செய்தி