Home /News /tamil-nadu /

ஒருவரையும் தப்பவிட மாட்டோம் - கள்ளக்குறிச்சி மாணவியின் தாயாருக்கு உறுதியளித்த முதலமைச்சர் ஸ்டாலின்

ஒருவரையும் தப்பவிட மாட்டோம் - கள்ளக்குறிச்சி மாணவியின் தாயாருக்கு உறுதியளித்த முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஸ்ரீமதியின் தாயார் சந்திப்பு

முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஸ்ரீமதியின் தாயார் சந்திப்பு

Kallakkurichi : குற்றவாளிகள் யாரையும் தப்பவிட மாட்டோம் என முதலமைச்சர் உறுதியளித்ததாகவும் அவரை முழுமையாக நம்புவதாகவும் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் தெரிவித்தார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது அவருடன் அமைச்சர் அன்பில் மகேஷ், ஏ.வ.வேலு, சிவி கணேசன் ஆகியோர் உடனிருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.  இதனை தொடர்ந்து மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் தாயார் தெரிவித்தார்.

    பள்ளி மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டி தனியார்பள்ளி முன் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப்போராட்டம் வன்முறையில்  முடிந்தது. தனியார் பள்ளி சூறையாடப்பட்டது.இதனையடுத்து பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று 5 பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

    இதையும் வாசிக்க: தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் தேதி மாற்றம்… என்ன காரணம்?

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் பெற்றோர்,  தங்களது மகள் மரணத்திற்கு காரணமான யாரும் தப்பிவிடக்கூடாது. குற்றவாளிகளை அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என அவரது தாயார் கூறினார். மேலும் விசாரணையை விரைவாக முடிக்க முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

    அதற்கு குற்றவாளிகள் யாரையும் தப்பவிட மாட்டோம் என முதலமைச்சர் உறுதியளித்ததாகவும் அவரை முழுமையாக நம்புவதாகவும் தெரிவித்தார்.  இரண்டு உடற்கூராய்விலும் ஒரு சில விஷயங்கள் கூறப்பட்டுள்ளது எனவும் சில விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார், மேலும் பள்ளி நிர்வாகம் சிசிடிவி காட்சிகளை கொடுக்கவில்லை, தப்பு செய்திருப்பதால் தான் சிசிடிவி காட்சிகளை தரவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.கைது செய்யப்பட்ட 5 பேர் ஜாமீனில் இருக்கிறார்கள், அதனை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Kallakurichi, MK Stalin

    அடுத்த செய்தி