முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கள்ளக்குறிச்சி மாணவி மரணம் விவகாரம்: யூடியூபர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் விவகாரம்: யூடியூபர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக யூடியூபர்கள் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக யூடியூபர்கள் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

அனைவரும் சிபிசிஐடி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி வேண்டிக் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம் தொடர்பாக யூடியூபர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக  அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் 17 வயது பள்ளி மாணவி  இறந்தது  தொடர்பான வழக்கு  குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு புலன்விசாரணையில் உள்ளது.

விழுப்புரம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையினர் மேற்படி வழக்கில் புலன்விசாரணை மேற்கொண்டு, மேற்படி இறப்பு சம்பந்தமாக அனைத்து கோணங்களிலும் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.. போதைப் பொருள் ஒழிப்புக்கு ஒத்துழைக்க வேண்டுகோள்..

இவ்வழக்கில் நியாயமான மற்றும் விரிவான புலன்விசாரணை நடைபெற்று வருகின்றது. இவ்வழக்கின் புலன்விசாரணையை  மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம்  கண்காணித்து வருகின்றது.

சமூக ஊடகங்கள், பத்திரிக்கை  மற்றும் காட்சி ஊடகங்கள் இது சம்பந்தமாக அவர்களது சொந்தக் கருத்துக்களையும், அறிக்கைகளையும் காணொளி காட்சிகள் வாயிலாக வெளியிட்டும், மேலும் இது சம்பந்தமாக இணையான புலன்விசாரணை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் புலன்விசாரணையை பாதிக்கும் வகையில் அமைகின்றது.

இத்தகைய சூழ்நிலையில், புலன்விசாரணையின் முன்னேற்றத்தை பாதிக்கும் வகையில் எந்தவிதமான பதிவு மற்றும் காணொளி காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாமென்று அனைவரும் வேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

மேலும், இது தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கும், நியாயமான புலன்விசாரணை மேற்கொள்ளவும் அனைவரும் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு  துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி வேண்டிக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

அரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு - தலைமைச் செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு

ஏதேனும் தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறான இணையான புலன்விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும், அவர்களுடைய வலைதள கணக்குகள் மற்றும் யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வழக்கு தொடர்பாக யாருக்கேனும்  உரிய தகவல் கிடைத்தால் அதனை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் உயர் அதிகாரியின் அலைப்பேசி எண்.9003848126 க்கு  நேரடியாக பகிரும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

First published:

Tags: Kallakurichi