முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கள்ளக்குறிச்சி மாணவி உடலை நாளை காலை பெற்றுக்கொள்கிறோம்.. போலீஸ் பாதுகாப்பு அவசியமில்லை - பெற்றோர் தரப்பு நீதிமன்றத்தில் தகவல்

கள்ளக்குறிச்சி மாணவி உடலை நாளை காலை பெற்றுக்கொள்கிறோம்.. போலீஸ் பாதுகாப்பு அவசியமில்லை - பெற்றோர் தரப்பு நீதிமன்றத்தில் தகவல்

கள்ளக்குறிச்சி வன்முறை

கள்ளக்குறிச்சி வன்முறை

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை நாளை காலை 6 -7 மணிக்குள் பெற்றுக்கொள்கிறோம் என பெற்றோர் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்

  • Last Updated :

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்த வழக்கில் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி கடந்தவாரம் பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து மரணமடைந்தனர். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மாணவியின் மரணத்துக்கு நியாகம் கேட்டு பள்ளியை முற்றையிட்டு பெற்றோர், கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கடந்த ஞாயிற்றுகிழமை வன்முறையில் முடிந்தது.

மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். மாணவியின் உடலை மறுகூராய்வு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் தாங்கள் கூறும் மருத்துவர் குழுவில் இடம்பெற வேண்டும் என்ற பெற்றோரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாணவியின் உடல் மறுகூராய்வு செய்யப்பட்டது. இதில் பெற்றோர் தரப்பில் யரும் கலந்துக்கொள்ளவில்லை. மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர், உறவினர் தரப்பில் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை. இதனையடுத்து போலீஸார் மாணவியின் வீட்டிற்கு சென்று உடலை பெற்றுக்கொள்ளுமாறு நோட்டீஸ் ஒட்டினர்.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. எப்போது உடலை பெற்றுக்கொள்கிறீர்கள் .ஒவ்வொரு முறையும் புதிய புதிய பிரச்சனைகளை எழுப்புகிறீர்கள். மருத்துவ குழுவை அமைக்க நீங்களோ நானோ நிபுணத்துவம் பெற்றவர்கள் அல்ல என நீதிபதி கூறினார்.

இந்நிலையில் பள்ளி மாணவியின் உடலை நாளை காலை 6 -7 மணிக்குள் பெற்றுக்கொள்கிறோம் என பெற்றோர் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர். மாணவியின் உடலை பெற்றுக்கொண்டு நாளையே அடக்கம் செய்ய வேண்டும் என நீதிபதி கூறீனார். இறுதி ஊர்வலத்தின் போது காவல்துறையின் பாதுகாப்பு அவசியமில்லை என பெற்றோர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

First published:

Tags: Chennai, Kallakurichi, Private schools, Tamilnadu