Home /News /tamil-nadu /

கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வைத்த கோரிக்கைகள் என்ன?

கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வைத்த கோரிக்கைகள் என்ன?

முதலமைச்சரை சந்தித்த ஸ்ரீமதியின் பெற்றோர்

முதலமைச்சரை சந்தித்த ஸ்ரீமதியின் பெற்றோர்

என் மகளின் பிரேதத்தை மருத்துவமனை பிண அறையில் யார் சொல்லி யார் வைத்தார்கள் என்று கேட்டதற்கு எனக்கு பதில் இல்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
கள்ளக்குறிச்சி மாணவி  மரணத்திற்கு நீதி கேட்டு அவரது பெற்றோர்கள் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவியின் வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கொடுத்த மனுவில் 14 கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

அந்த மனுவில் இடம் பெற்றிருந்த 14 கோரிக்கைகள்:
என் மகள் இறந்த தருணத்திற்கு முன்பும் பின்பும் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் எனக்கு காண்பிக்க காவல்துறை அதிகாரிகளை கேட்டேன் ஆனால் அவர்கள் காட்டவில்லை.
என் மகள் இறந்து விட்டதாக எனக்கு செய்தி சொன்ன பள்ளி நிர்வாகத்தினரிடம் நான் வரும்வரை மருத்துவமனையில் காத்திருக்க சொன்னேன் ஆனால் அனைவரும் ஓடிவிட்டனர் பள்ளி நிர்வாகம் என் மகள் மரணத்திற்கான காரணத்தையோ விளக்கத்தையோ அளிக்கவில்லை.
என் மகள் இறந்த அன்று என் மகள் தங்கி இருந்த அறை அவளுடைய பை அவளுடைய உடைமைகளை என்னிடம் காண்பிக்கவும் என் மகளின் தோழிகளை நான் சந்திக்க வேண்டும் என்றும் காவல்துறையிடம் சொன்னேன் ஆனால் காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
என் மகள் இறப்பிற்கு முன் எழுதியதாக ஒரு கடிதம் இருந்ததாகவும் அவை ஜூலை 13 அன்று எடுத்ததாக கூறி காவல்துறையினர் என்னிடம் கொடுக்காமல் ஊடகத்தினரிடம் படித்துக் காட்டினார்.
என் மகளின் முதல் பிரேத பரிசோதனையை உரிய வருவாய் மற்றும் மருத்துவ அதிகாரிகள் முன்னிலையில் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தேன் ஆனால் அந்த வகையில் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.
எனது மகளின் மரணத்திற்கு உரிய விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஜூலை 13 முதல் ஜூலை 16 வரை அதிகாரிகளிடம் முறையிட்டோம் அவர்கள் யாரும் உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை.
என் மகள் விழுந்ததாக கூறப்பட்டுள்ள இடத்தில் ரத்த தொய்வு எதுவும் இல்லை.
என் மகளின் பிரேதத்தை மருத்துவமனை பிண அறையில் யார் சொல்லி யார் வைத்தார்கள் என்று கேட்டதற்கு எனக்கு பதில் இல்லை.
மாவட்ட ஆட்சித் தலைவர் பள்ளிக்கு வந்து என் மகள் மரணம் சம்பந்தமாக ஆய்வு செய்யாமல் இருந்தது
முதல் உடற்கூறாய்வில் பாலியல் தொடர்பான பரிசோதனைகள் செய்யாமல் இருந்தது
இரண்டாவது உடற்கூறாய்வில் என் மகள் தரப்பில் மருத்துவரை உயர்நீதிமன்றம் அனுமதிக்க மறுத்தது உயர் நீதிமன்ற தீர்ப்பில் மாணவி தரப்பில் பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் கலந்து கொள்ளலாம் என்ற தீர்ப்பு இருந்தும் பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் இல்லாமல் அவசர அவசரமாக இரண்டாவது உடற்கூறாய்வு செய்தது.
என் மகளின் உடலை வாங்கி அடக்கம் செய்வதற்கு உயர் நீதிமன்றம் அவசர அவசரமாக தீர்ப்பு வழங்கியது.
என் மகள் அணிந்திருந்த தங்கத்தோடு வெள்ளி கொலுசு இரண்டையும் கேட்டதற்கு அது பற்றி எதுவும் தகவல் இல்லைஎனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலையிட்டு என் மகள் மரணத்தில் உள்ள மர்மங்களை எனக்கு தெளிவுபடுத்தவும் உரிய நடவடிக்கை எடுத்து என் மகள் மரணத்திற்கு நீதி கிடைக்க ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Published by:Ramprasath H
First published:

Tags: Kallakurichi, MK Stalin, Tamil News

அடுத்த செய்தி