Home /News /tamil-nadu /

கள்ளக்குறிச்சி கலவரம்: ஆட்சியர், எஸ்.பி சிறப்பாக பணியாற்றியதாக சொல்லிவிட்டு, பணியிட மாற்றம் செய்துள்ளனர் - அண்ணாமலை விமர்சனம்

கள்ளக்குறிச்சி கலவரம்: ஆட்சியர், எஸ்.பி சிறப்பாக பணியாற்றியதாக சொல்லிவிட்டு, பணியிட மாற்றம் செய்துள்ளனர் - அண்ணாமலை விமர்சனம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஆட்சியர், எஸ்.பி சிறப்பாக பணியாற்றியதாக நேற்று அமைச்சர் கூறிய நிலையில், இன்று பணியிட மாற்றம் செய்துள்ளனர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி 17 வயது மாணவி, கடந்த 13ம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இதனிடையே சமூக வலைத்தளங்களில் மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு, கண்டனங்கள் எழுந்தன. இதன் மூலமாக நேற்று முன்தினம், மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பெருமளவில் மக்கள் கூட்டம் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. இதில், போராட்டக்காரர்கள் பள்ளி பேருந்துகள், காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து, இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, கள்ளகுறிச்சி எஸ்.பி செல்வக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி அதிரடி மாற்றம் செய்த தமிழக அரசின் நடவடிக்கை முன்னுக்கு பின் முரணாக உள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறும்போது, கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு, கலவரம் தொடர்பாக எஸ்.பி சிறப்பாக பணியாற்றியதாக நேற்று அமைச்சர் சொல்லிவிட்டு இன்று பணியிட மாற்றம் செய்துள்ளனர். இதேபோல் டிஜிபி பேசும் போது பள்ளி நிர்வாகத்தின் மீது தவறு இல்லை என்று சொல்லிவிட்டு அன்று மாலையே கைது செய்திருக்கிறார்கள்.

    மாணவி இறந்த இரண்டாவது நாளே, பாஜக சார்பில் சிபிசிஐடி விசாரணை கேட்கப்பட்டது. ஐந்தாவது நாள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Annamalai, Kallakurichi

    அடுத்த செய்தி