சுற்றுலாத் தளங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியும் 2008-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின் போது தான் உருவாக்கப்பட்டது.
2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் ஆதி சங்கர் 3,63,601 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்ததாக நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலின் போது அ.தி.மு.க வேட்பாளர் க. காமராஜ் 5,33,383 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் ஆர். மணிமாறன் 3,09,876 வாக்குகளைப் பெற்று தோல்வியைச் சந்தித்தார். தே.மு.தி.க-வின் ஈஸ்வரன் 1,64,183 வாக்குகளையும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஆர். தேவதாஸ் 39,677 வாக்குகளையும் பெற்று தோல்வியைத் தழுவினர்.
15-வது மக்களவைத் தேர்தலில் 77.28% வாக்குகள் பதிவான நிலையில், 16-வது மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு 0.98 சதவிகிதம் உயர்ந்து 78.26% எனப் பதிவாகியிருந்தது.
Published by:Rahini M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.