கோவிட் குமார், கோவேக்சின் சூர்யா - வைரலாகும் கள்ளக்குறிச்சி பாய்ஸின் அலப்பறையான பேனர்

கொரோனா பேனர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர்கள் இணைந்து நண்பரின் திருமணத்துக்கு அடித்த பேனர் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

 • Share this:
  உலக அளவில் கொரோனா மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திவருகிறது. சீனாவின் ஊஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டு தொடங்கிய கொரோனா பாதிப்பு இன்னமும் முழுவதுமாக கட்டுக்குள் வரவில்லை. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா சிதைந்து கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டாலும் நம்மூர் இளைஞர்கள் கொரோனாவை கலாய்த்து வருகின்றனர். கொரோனா பரவத் தொடங்கிய காலத்திலிருந்து கொரோனா தொடர்பாக மீம்கள் பதிவிட்டுவருகின்றனர். அதன் உச்சமாக புதுக்கோட்டையில் கோவிட் 19 என்ற பெயரில் இளைஞர்கள் துணிக் கடை தொடங்கினர். தற்போது, அதைப் போன்றதொரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

  கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கிராமத்தில் ராஜ்குமார்-பொன்னரசி ஜோடிக்கு கடந்த 14ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்துக்கு நண்பர்கள் அடித்த பேனரில் இன்ஜினியருக்கு தொற்று உறுதி என தலைப்பிட்டு, மணமகனை தொற்றாளர் என்றும். தொற்றிக்கொன்டவர் மணமகள் என்றும் குறிப்பிட்டனர். அத்துடன் வாழ்த்தும் நண்பர்கள் பெயர்களுக்கு முன்பு கொரோனா தொடர்புடைய பெயர்களை அடைமொழியாக சேர்த்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பேனர் அடித்த நண்பர்களின் பெயர்கள், ரத்தக்கொதிப்பு ரமேஷ், ஆம்புலன்ஸ் ஆதி, சுடுதண்ணி சுப்பிரமணி, காய்ச்சல் கருப்பன், சானிடைசர் ஸ்ரீராம் உள்ளிட்ட பெயர்கள் ரசிக்க வைத்தன. மேலும் கோரோனா காலத்து காலர்ட்டோன் பாணியில் சிகிச்சையாக மணமகன் போராடவேண்டியது கொரோனாவுடன் அல்ல.... மனைவியுடன் என்றும் பதிவிட்டுள்ளனர்.
  Published by:Karthick S
  First published: