திருக்கோவிலூரில் கோயில் வளாகத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா? தற்காலையா? போலீசார் விசாரணை

திருக்கோவிலூரில் கோவில் வளாகத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம்...

கோயிலின் அருகில் உணவகம் வைத்திருந்த பெண் ஒருவர் வந்து பார்த்தபோது பாதி எரிந்த நிலையில் உயிரிழந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இருப்பது தெரியவந்துள்ளது.

 • Share this:
  திருக்கோவிலூரில் கோயில் வளாகத்தில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் 4 மணி சந்திப்பு அருகே உள்ள பாலசுப்பிரமணியன் கோயில், கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு பணிக்காக மூடி வைக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் இன்று காலை கோயிலின் அருகில் உணவகம் வைத்திருந்த பெண் ஒருவர் வந்து பார்த்தபோது பாதி எரிந்த நிலையில் உயிரிழந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இருப்பது தெரியவந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனைடுத்து அவர் திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த டிஎஸ்பி (பொறுப்பு) திருமேனி மற்றும் இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் தலைமையிலான காவலர்கள் எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

  தொடர்ந்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருக்கோவிலூர் போலீசார் அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொல்லப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செய்தியாளர்  - எஸ்.செந்தில்குமார்
  Published by:Esakki Raja
  First published: