• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோயில் திருவிழா ரத்து; கூவாகத்தில் எளிமையான முறையில் வழிபட்டு செல்லும் திருநங்கைகள்

கோயில் திருவிழா ரத்து; கூவாகத்தில் எளிமையான முறையில் வழிபட்டு செல்லும் திருநங்கைகள்

கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள்

கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள்

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திருநங்கைகள் அங்கு எளிமையான முறையில் வழிபாடு நடத்தி விட்டு சென்ற வண்ணம் உள்ளனர். 

  • Share this:
    கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திருநங்கைகள் அங்கு எளிமையான முறையில் வழிபாடு நடத்தி விட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுத்தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைப்பெறுவது வழக்கம். இத்திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி திருவிழா நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் திருநங்கைகள் வருகை தந்து எளிமையான முறையில் வழிபாடு நடத்தி விட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.

    சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, கடலூர், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் திருநங்கைகள் மணக்கோலத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு வந்திருந்து கூத்தாண்டவரை வழிபாடு நடத்தினர். அப்போது கூத்தாண்டவரை வழிபட்டதை நினைத்து திருநங்கைகள் கும்மியடித்து பாட்டுபாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    வழக்கமாக திருநங்கைகள் மணப்பெண்ணைப் போல அலங்கரித்து கொண்டு கூத்தாண்டவரையே தங்களது கணவராக நினைத்து கோயில் பூசாரிகளிடம் தாலிக் கட்டிக் கொள்வதை தங்களது வாழ்நாள் பாக்கியமாக கருதுகின்றனர். தற்போது கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்காதது பெரிதும் கவலை அடைய செய்துள்ளதாக திருநங்கைகள் தெரிவித்தனர்.

    செய்தியாளர் - குணாநிதி ஆனந்தன்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: