ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கெடிலம் காட்டாறு வெள்ளத்தில் காருடன் அடித்து செல்லப்பட்ட மூவர்

கெடிலம் காட்டாறு வெள்ளத்தில் காருடன் அடித்து செல்லப்பட்ட மூவர்

கெடிலம் ஆற்றில் தேடுதல் பணி

கெடிலம் ஆற்றில் தேடுதல் பணி

தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் காவல் துறையினர் ஆகியோர், கெடிலம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முருகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கெடிலம் ஆற்றில் காருடன் அடித்து செல்லப்பட்ட மூன்று பேரில் இருவர் மீண்டு வந்த நிலையில் மேலும் ஒருவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருக்கோவிலூர் அருகே உள்ள கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர்  சங்கர் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த கிளியன் மற்றும் முருகன் ஆகிய மூவரும் கார் ஒன்றில் கிளியூர் கிராமத்தில் இருந்து திருக்கோவிலூர் அருகே உள்ள செட்டிதாங்கல் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

காரை முருகன் ஓட்டினார். இந்நிலையில், அந்த காரை ஓட்டிய முருகன், பழங்கூர் தரை பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்த காட்டாற்று வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல்  கடந்து செல்ல முயன்றார். அப்போது, கார் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்து மழை வெள்ளத்தில் காருடன் மூன்று பேரும் அடித்து செல்லப்பட்டனர். அப்போது காரில் இருந்து கீழே குதித்து, கிளியன் மற்றும் சங்கர் ஆகிய இருவரும் உயிர் தப்பினர்.

இந்நிலையில், காரை ஓட்டிச் சென்ற முருகன் காரோடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து, திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் திருக்கோவிலூர் காவல் துறையினர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முருகனை நேற்று இரவு முதல் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கரை சேர்ந்த இருவர்.

Must Read : ஒமைக்ரான் உலகளவில் மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தும் - WHO எச்சரிக்கை

அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் எச்சரிக்கை விடுத்தும் மதுபோதையில் அவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் காரை இயக்கியதாக, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

செய்தியாளர் - எஸ் .செந்தில்குமார், கள்ளக்குறிச்சி.

First published:

Tags: Flood, Kallakurichi