கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அரசு பேருந்து ஓட்டுனர் வீட்டில் புகுந்த பாம்பு, தீயணைப்புத் துறைக்கு ஆட்டம் காட்டியது. இந்த பாம்பு மூன்று மணி நேரத்திற்கு பின் பிடிபட்டது இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ ராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் அரசு பேருந்து ஓட்டுநரான காமராஜ். இவரது வீட்டில் நேற்று இரவு 4 அடி நீளமுள்ள பாம்பு புகுந்துள்ளது. வழக்கம் போல் காலை எழுந்தபோது பாம்பு இருந்ததைப் பார்த்து அதிர்ந்த காமராஜ், உளுந்தூர்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து, அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பு பிடிப்பதற்கான கருவிகளைக் கொண்டு உள்ளே சென்றனர். காலை 7 மணி முதல் 10 மணி வரை அந்தப் பாம்பு தீயணைப்புத் துறையினரிடம் பிடிபடாமல் அங்கும் இங்கும் ஆட்டம் காட்டியது. தீயணைப்பு துறையினர் தொடர்ந்து பாம்பு பிடிக்க கடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பாம்பை பிடிக்கும் தீயணைப்புத் துறையினர்
Must Read : தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் 450 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் கலை விழா..
இந்நிலையில், மூன்று மணி நேரத்திற்குப் பின்பு தீயணைப்புத்துறையினருக்கு ஆட்டம் காட்டிய பாம்பை கருவிகளைக் கொண்டு பிடித்தனர். பின்னர் அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர் : எஸ் .செந்தில்குமார், கள்ளக்குறிச்சி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.