கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ பிழம்பு கிளம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கல்வராயன் மலைப் பகுதியில் குரும்பலூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சிறிய கூரை வீட்டில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் மகன் ராஜா. இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும், ரோகித் சர்மா என்ற பத்து மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
ராஜாவின் மனைவி ஜெயராணி நேற்று இரவு பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது ஜெயராணி அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு டீ தூள் வாங்குவதற்காக சென்றுள்ளார். வெளியே சென்ற ஜெயராணி சிலிண்டர் அடுப்பை அணைக்காமலே சென்றுள்ளார். அடுப்பில் வைக்கப்பட்டிருந்த இருந்த பால் அதிக கொதிநிலை ஏற்பட்டு பலமுறை பொங்கிவழிந்துள்ளது.
இதனால் திடீரென சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் கேஸ் குழயாயில் தீப்பற்றி வீட்டிலிருந்த சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. அக்கம்பக்கத்தினர் அலறியடித்துக் கொண்டு அங்குள்ள ஒரு பள்ளியில் தங்கியுள்ளனர். இச்சம்பவம் ஏற்பட்டுபல மணி நேரங்கள் ஆகியும் காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என அக்கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
-செய்தியாளர்: செந்தில்குமார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.