திருக்கோவிலூர் அருகே கெடிலம் ஆற்றில் காருடன் அடித்துச் செல்லப்பட்ட நபரை மீட்கும் பணியில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மற்றும் அதே ஊரை சேர்ந்த முருகன் கிளியன் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் இரவு திருக்கோவிலூர் அருகே உள்ள செடியனதாங்கள் பகுதிக்கு காரில் சென்றுள்ளனர் காரை முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே போடப்பட்டுள்ள தரை பாலத்தின் வழியாக சென்றுள்ளனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு உள்ளதால் இவ்வழியாக யாரும் குறுக்கே செல்ல வேண்டாமென எச்சரிக்கை பெயர் பலகை பொதுப்பணித் துறையின் சார்பில் வைக்கப்பட்டிருந்தது. அதனைப் பொருட்படுத்தாமல் அவர்கள் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப் பாலத்தை கடந்து செல்ல முற்பட்டுள்ளனர்.
Also Read: இனி 1ரூபாய்க்கு தீப்பெட்டி கிடைக்காது.. தமிழகத்தில் இன்று முதல் தீப்பெட்டி விலை உயர்வு
அவர்கள் பயணம் செய்த கார் தரைப்பாலத்தின் மீது சில மீட்டர் தூரம் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சங்கர் மற்றும் கிளியன் ஆகிய இருவரும் அடித்துச் செல்லப்பட்ட காரிலிருந்து வெளியே குதித்து நீச்சலடித்து தப்பியுள்ளனர். ஆனால் காரை ஓட்டிச்சென்ற முருகன் என்பவர் காருடன் இழுத்துச் செல்லப்பட்டார்.
Also Read: அன்வர் ராஜாவின் அடுத்த மூவ் என்ன?
இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை ஊர்களைச் சேர்ந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர் .இந்நிலையில் நேற்று வரை கார் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அரக்கோணத்தை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 8 பேர் கொண்ட குழு இன்று 2-வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு சென்று ஆய்வு செய்தார் .மேலும் நேற்று இரவு ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் : செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Car, Flood, Flood warning, Heavy rain, Heavy Rainfall, Tamil News