தங்கம் வென்ற வீராங்கனையை கெளரவப்படுத்த தவறிய தமிழக அரசு!

கபடி வீராங்கனை அந்தோனியம்மாள்

தமிழக முதல்வர் தனது கோரிக்கையை கருணையைுடன் பரிசீலித்து வறுமையின் பிடியில் உள்ள தனக்கு அரசு வேலையும், குடும்பத்தினருக்கு பயன்படும் வகையில் ஊக்கத்தொகையும் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

 • Share this:
  2016 - 2017ஆம் ஆண்டுகளில் ஆசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இந்திய பீச் கபடி அணிக்கு தேர்வு செய்யப்பட்டவர் தமிழக கபடி வீராங்கனை அந்தோனியம்மாள்,. இவர் பங்கு பெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தையும் தங்கப் பதக்கங்களையும் பெற்ற இந்திய அனியில் பங்கேற்று சிறப்பாக விளையாடியவர்.

  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்துள்ள சோழ பாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்த அந்தோனியம்மாள் தனது கிராமத்திற்கு அருகே உள்ள ஜி.அரியூர் மேல்நிலை பள்ளியில் 2010 - ஆம் ஆண்டு +2 படித்தபோது சங்கராபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிய அந்தோனியம்மாளின் அபார விளையாட்டுத் திறமையை கண்டறிந்த மதுரையைச்சேர்ந்த உடற்கல்வி பயிற்சியாளர் ஜனார்த்தன தேவா என்பவர் அந்தோனியம்மாள் கல்லூரி படிப்பை தொடர எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக மதுரை யாதவா கல்லூரியில் சேர்க்க உதவியதோடு பயிற்சியும் அளித்துள்ளார்.

  Also read: 2022ம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் லிஸ்ட்!

  கல்லூரி அணியின் சார்பாக பல்கலைக்கழகம், மற்றும் மாநில அளவில் விளையாடி படிப்படியாக இந்திய அணிக்கு தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே வீராங்கனை அந்தோனிய்யம்மாள் தான்.

  2016-ஆம் ஆண்டு ஆசிய அளவில் வியட்நாமில் நடைபெற்ற பீச் கபடி போட்டியிலும், 2017-ஆம் ஆண்டு மொரிஷீசியஸ் தீவில் சர்வதேச அளவில் நடைபெற்ற பீச் கபடி போட்டியிலும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி முதல் இடத்தையும், தங்கப் பதக்கம் பெறுவதற்கும் பங்காற்றியுள்ளார்.

  2017-ல் அனைத்து ஊடகங்களிலும் உச்சரிக்கப்பட்ட அந்தோனியம்மாள் பெயர் சில மாதங்களில் மறந்து போனது போல, வீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதாக தெரிவித்த தமிழக அரசும் இதுவரை எதுவும் செய்யவில்லை என வேதனை தெரிவிக்கிறார். படித்துக் கொண்டிருந்தபோது போட்டிகளில் பங்கேற்று விளையாடச் சென்ற போதெல்லாம் வறுமையான சூழ்நிலையிலும் கடன் வாங்கி கொடுத்து அனுப்பி வந்துள்ளனர்.

  Also read:  மத உணர்வுகளை காயப்படுத்தி விளம்பரம் – பிரபல பிரியாணி உணவகத்துக்கு எதிர்ப்பு!

  மூன்றரை ஆண்டுகளாக அரசின் உதவிகளுக்காக காத்திருந்த அந்தோனியம்மாளின் தந்தை சவரிமுத்து தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார் அந்தோனியம்மாள்.

  2016-2017 - களில் தன்னைப்பற்றி செய்திதாள்களில், வார இதழ்களில் வந்த செய்திகளையும், சான்றிதழ்கள், பதக்கங்களையும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அந்தோனியம்மாள் நம்மிடம் கூறுகையில்:- என்னுடன் பங்கேற்று விளையாடிய அரியானாவைச் சேர்ந்த வீராங்கனைகள் இருவருக்கு அரியானா அரசு அரசுப்பணி வழங்கி கோடிக்கணக்கில் ஊக்கத்தொகையும் வழங்கியுள்ளது. இதேபோல் கொல்கத்தா, ஆந்திர வீராங்கங்கனைகளுக்கு அந்த மாநில அரசுகள் அரசுப்பணி உள்ளிட்ட சலுகைகளை வழங்கியுள்ளது.

  Also read:  பேஸ்புக்கை ஆட்டம் காண வைத்த டிக் டாக் செயலி – உலகளவில் புதிய சாதனை!

  ஆனால் தமிழக அரசு தனக்கு இதுவரை அரசுப் பணியோ , சலுகைகளோ வழங்கவில்லை என வேதனை தெரிவித்த அந்தோனியம்மாள். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் உளுந்தூர்பேட்டையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் இது குறித்து கோரிக்கை மனு அளித்த போது தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தனது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகவும் உறுதியுள்ளார்.

  ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 100 - நாட்களை கடந்துள்ள நிலையில் ஆசிய அளவிலும் , சர்வதேச அளவிலும் வென்று முதலிடம் பெற்றதற்கான 5-வருடங்கள் வரை கால அவகாசம் உள்ள 4 - சான்றிதழ்களின் தகுதிகால அளவு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக முதல்வர் தனது கோரிக்கையை கருணையைுடன் பரிசீலித்து வறுமையின் பிடியில் உள்ள தனக்கு அரசு வேலையும், குடும்பத்தினருக்கு பயன்படும் வகையில் ஊக்கத்தொகையும் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

  Also read:   தலிபான்களை ஒடுக்க இந்தியாவின் உதவியை நாடிய ஆப்கானிஸ்தான் அரசு!

  இது குறித்து அந்தோனியம்மாளின் தந்தை சவரிமுத்து கூறுகையில் 2017-ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று திரும்பிய சில நாட்களில் மாவட்ட அலுவலக அதிகாரிகள் சிலர் தனது வீட்டிற்கு வந்து முதல்வர் அந்தோனியம்மாவிற்கு வீடு கட்டித்தர உத்தரவிட்டுள்ளதாகவும், குடிசை வீட்டினை அப்புறப்படுத்தி இடத்தினை காலி செய்து தருமாறு கூறிவிட்டுச்சென்றதோடு சரி மீண்டும் தங்களை திரும்பி கூட பார்க்கவில்லை எனவும் தனது மகளுடன் பல முறை சென்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற போதும் பல்வேறு காரணங்களை கூறி அலைகழித்ததால் மனம் நொந்து வறுமையோடு, வறுமையாக தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டதாக கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கிராமப்புறங்களை சேர்ந்த திறமையான விளையாட்டு வீரர்கள் இந்திய அணியில் பங்கேற்பதே எட்டாக்கனியாக உள்ள நிலையில் சர்வதேச போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் பெறுவதற்கு தனது அபாரத்திறமையை வெளிபடுத்திய இந்த தங்க மங்கையை தற்போதைய அரசாவது கெளரவித்து அவரது கோரிக்கைகளை நிறைவேற்றுமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  செய்தியாளர்: எஸ்.செந்தில்குமார்
  Published by:Arun
  First published: