முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மழையால் அழுகும் பப்பாளி : வேதனையில் கள்ளக்குறிச்சி விவசாயிகள்

மழையால் அழுகும் பப்பாளி : வேதனையில் கள்ளக்குறிச்சி விவசாயிகள்

அழுகும் பப்பாளி பயிர்

அழுகும் பப்பாளி பயிர்

பப்பாளி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், பயிர் இழப்பீடு நிவாரண தொகை வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

  • Last Updated :

கள்ளக்குறிச்சி அருகே வடகிழக்கு பருவமழையால் 3 ஏக்கரில் பயிரிடப்பட்ட பப்பாளி அழுகி வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக் கூறி விவசாயி வேதனை தெரிவிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சு.ஒகையூர் கிராமத்தில் வசித்து வரும் பூமாலை என்பவர் தனது 3 ஏக்கரில் பப்பாளி பழத்தை சாகுபடி செய்து சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை சென்னையில் அதிக அளவில் பெய்து வருவதால், பப்பாளியை ஏற்றுமதி செய்ய வியாபாரிகள் முன் வரவில்லை எனவும், மேலும் இதனால் மூன்று ஏக்கரில் பயிரிடப்பட்ட பப்பாளிப்பழம் மரத்திலே அழுகி வீணாகி வருவதால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

சென்ற முறை பப்பாளி 10 ரூபாய் வரை லாபம் கிடைத்தது எனவும், இம்முறை வெறும் 4 ரூபாய்க்கு கேட்கிறார்கள் என்றும் அதுவே கூட எடுக்க ஆள் இல்லை என்றும் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கிறார்.

ஐந்து லட்சம் மதிப்பீட்டில் செலவு செய்து பப்பாளி பயிரினை பயிரிட்ட தாகவும், இம்முறை பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பயிர் இழப்பீடு நிவாரண தொகை வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

செய்தியாளர் - எஸ் .செந்தில்குமார், கள்ளக்குறிச்சி.

First published:

Tags: Farmers, Kallakurichi, Papaya