ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தடுப்பூசி போடும் கிராமப்புற செவிலியர்கள் கண்ணீர் மல்க முன்வைத்த கோரிக்கை

தடுப்பூசி போடும் கிராமப்புற செவிலியர்கள் கண்ணீர் மல்க முன்வைத்த கோரிக்கை

செவிலியர்கள்

செவிலியர்கள்

கிராமப்புற செவிலியர்கள் கடந்த எட்டு மாத காலமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடும் கிராமப்புற செவிலியர்களுக்கு வாராந்திர விடுப்பும், வேக்சின் போடுவதற்கு உரிய பாதுகாப்பு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சியில் பணியாற்றும் செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற செவிலியர்கள் கடந்த எட்டு மாத காலமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் நாளொன்றுக்கு கட்டாயம் 50க்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு கோவிட் தடுப்பூசியை செலுத்தியாக வேண்டும் என்று நிர்பந்த படுத்துவதாக கூறினர்.

  இதனால் வாரத்தில் புதன் கிழமை தோறும் கிராமப்புறங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசி மற்றும் குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசி உள்ளிட்ட தாய் சேய் நல பணிகளை கவனிக்க முடியாமல் போவதாகவும் இதனால் கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

  எனவே, நிர்ணயிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகளை செலுத்தியே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதால் கிராமப்புற செவிலியர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாக வதோடு, சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம் என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.

  மேலும், தடுப்பூசி செலுத்த கிராமப்புறங்களுக்கு செல்லும் பொழுது சிலர் மறைந்து கொள்வதாகவும், சிலர் தகராறில் ஈடுபடுவதாகவும் இதனால் தங்கள் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியவில்லை எனவும், 93 சதவீதம் தடுப்பூசி செலுத்திய பின்னரும் மீதமுள்ள சிலருக்கு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த நிர்பந்திக்கப் படுவதால் பொதுமக்களோடு போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

  காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்தப் பணியில் ஈடுபடுவதால், சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட உடல் உபாதைகளை பொறுத்துக் கொண்டு இருப்பதால், தங்களுக்கு சிறுநீரக கோளாறு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறும் செவிலியர்கள், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தால் அவர்கள் செவிசாய்க்காமல் தங்களை மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதாக கூறுகின்றனர்.

  அனைவருக்கும் உள்ள வார விடுமுறை மட்டுமல்லாமல், அரசு பொதுவிடுமுறைகளிலும் தங்கள் பணிகளில் ஈடுபடுவதால் தங்களது குடும்பத்தினை கவனிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகவதாகவும் கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததாகவும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை எங்கள் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் பெறவில்லை எனவும் கூறினர்.

  Must Read : மனித உரிமை என்ற வார்த்தையை பயன்படுத்த தடை- தனியார் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க சைலேந்திர பாபு உத்தரவு

  எனவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் கிராமப்புற செவிலியர்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  செய்தியாளர் - எஸ் .செந்தில்குமார், கள்ளக்குறிச்சி.

  Published by:Suresh V
  First published:

  Tags: Covid-19 vaccine, Nurses, Vaccination