Home /News /tamil-nadu /

அளவுக்கு அதிகமாக ஏறிய பயணிகள்... படியில் தொங்கிய மாணவர்கள்... பேருந்தை வழியில் நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுனர்

அளவுக்கு அதிகமாக ஏறிய பயணிகள்... படியில் தொங்கிய மாணவர்கள்... பேருந்தை வழியில் நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுனர்

ஓவர் கிரவுடு - பேருந்தை வழியில் நிறுத்திவிட்டு வாக்குவாதம்.

ஓவர் கிரவுடு - பேருந்தை வழியில் நிறுத்திவிட்டு வாக்குவாதம்.

Kallakkurichi : கள்ளக்குறிச்சி அருகே அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏறியதால் பேருந்தை நிறுத்திவிட்டு, கண்டக்டரும், டிரைவரும் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சியில் இருந்து சின்னசேலம் வழித்தடத்தில் செல்லும் அரசு பேருந்து ஒன்றில், இன்று காலை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். போதிய இடம் இல்லாததால், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் படியில் தொங்கியவாறு பயணம் செய்தனர்.

    இந்நிலையில், இந்திலி கிராமம் அருகே  அதே பேருந்தில் பயணம் செய்ய பயணிகள், மாணவி உட்பட 20க்கும் மேற்பட்டோர் பேருந்தை நிறுத்த முயன்றர்.  ஏற்கனவே பேருந்தில் அளவுக்கு அதிகமாக  பயணிகள் ஏறிய நிலையில், அவர்களை தடுத்து நிறுத்த முடியாமல் ஓட்டுநரும் நடத்துநரும் திணறினர்.

    இந்நிலையில், ஓட்டுநரும் பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து, இதற்கு மேல் பயணிகள் ஏறினால் பேருந்து விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்படும் என்று கூறினர். அதற்கு ஆதரவாக நடத்துநரும் பேசினார். இதனால் பயணிகள் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த வழித்தடத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் நேரங்களில் போதிய பேருந்து வசதி இல்லை எனவும் ஏற்கனவே பலமுறை மாணவர்களும் சின்னசேலம் பகுதியில் வேலைக்கு செல்பவர்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதையும் பயணிகள் அப்போது நினைவுபடுத்திப் பேசினர்.

    Must Read : சென்னை, மதுரையில் சதம் அடித்த வெயில்... மக்கள் வேதனை

    இந்நிலையில், பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் பயணிகளிடம் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு வந்த சின்னசேலம் போலீசார் இது குறித்து விசாரித்து பயணிகள் மற்றும் பேருந்து ஊழியர்களுக்கு அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தார். இதனால் அங்கே பரபரப்பு நிலவியது.

    செய்தியாளர் - எஸ். செந்தில்குமார், கள்ளக்குறிச்சி
    Published by:Suresh V
    First published:

    Tags: Bus, Kallakurichi

    அடுத்த செய்தி