Home /News /tamil-nadu /

கள்ளக்குறிச்சியில் குளம் தூர்வாரும் பணி... களமிறங்கிய எம்.எல்.ஏ.

கள்ளக்குறிச்சியில் குளம் தூர்வாரும் பணி... களமிறங்கிய எம்.எல்.ஏ.

 உதயசூரியன் எம்.எல்.ஏ.

உதயசூரியன் எம்.எல்.ஏ.

Kallakurichi : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட வடக்கநந்தல் பேரூராட்சியில் குளம் தூர்வாரும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் துவக்கி வைத்தார்.

    தமிழகத்தில் நகர்புற பகுதியில் வசிக்கும் ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசால் துவக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடக்கநந்தல் தேர்வுநிலை பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து இந்த பேரூராட்சிக்கு ரூ 75 லட்சம் மதிப்பீட்டில் 7 வார்டுகளில் உள்ள குளங்கள் தூர்வாரும் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இந்த தூர்வாரும் பணியை கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான தா.உதயசூரியன் துவக்கி வைத்தார்.

    Must Read : திருக்குறள் மூலம் திருவள்ளுவர் ஓவியம் வரைந்து அசத்திய பள்ளி மாணவி!

    நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் அரவிந்தன், பேரூராட்சி செயலாளர் ஆறுமுகம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், பயனாளிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் - எஸ் .செந்தில்குமார், கள்ளக்குறிச்சி
    Published by:Suresh V
    First published:

    Tags: Kallakurichi

    அடுத்த செய்தி