முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வெள்ளத்தில் சடலங்களை சுமந்து செல்லும் கிராம மக்கள்

வெள்ளத்தில் சடலங்களை சுமந்து செல்லும் கிராம மக்கள்

சடலத்தை சுமந்து செல்லும் பொதுமக்கள்

சடலத்தை சுமந்து செல்லும் பொதுமக்கள்

சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் வெள்ளத்தில் உயிரை பணயம் வைத்து சடலங்களை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயிரை பணையம் வைத்து இறந்தவர்களின் சடலங்களை எடுத்து செல்லும் கிராம மக்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  கருணாசெட்டிதாங்கள் ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு காலம் தொட்டு இன்று வரை  சுடுகாட்டு பாதை இல்லாததால் தென்பெண்ணை ஆற்றில் இறங்கி இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர் .

இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால்ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வேறுவழியின்றி ஆபத்தான நிலையில் தென்பெண்ணை ஆற்றில் இரண்டு கிலோமீட்டர் நீரில் சடலத்தை சுமந்து சென்று இடுகாட்டில் அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஊர் பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பல்வேறு காலகட்டங்களில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் இதனாலேயே தங்களது உயிரை பணயம் வைத்து சடலங்களை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதாக வேதனை தெரிவித்தனர்.

செய்தியாளர்: எஸ் .செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி)

First published:

Tags: Dead body, Flood, Rain water