Home /News /tamil-nadu /

தொடங்கியது கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா - கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்த பக்தர்கள்

தொடங்கியது கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா - கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்த பக்தர்கள்

கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்த பக்தர்கள்

கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்த பக்தர்கள்

koovagam Koothandavar Temple : புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா சாகை வார்த்தலுடன் துவங்கியது கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விமர்சையாக நடை பெறாத திருவிழா இந்த ஆண்டு நடைபெற தொடங்கியுள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா நேற்று மாலை சாகை வார்த்தல் நடைபெற்றது.  காலையில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கிய நிலையில், விழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் கஞ்சி கலயங்களை  ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படையலிட்டு மாவிளக்கு ஏற்றியும் வழிபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து சித்தரை 6ஆம் தேதி (ஏப்ரல் 19) இரவு ஏழு மணிக்கு சுவாமி திருக்கண் திறந்ததல் நிகழ்ச்சி நடக்கிறது. அப்பொழுது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டு அரவாணை கணவனாக ஏற்று அன்று இரவு முழுவதும் ஆடி பாடி மகிழ்வார்கள்.

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா


    மறுநாள் சித்திரை 7ஆம் (ஏப்ரல் 20) தேதி புதன்கிழமை காலை ஆறு மணிக்கு தேரோட்டம் துவங்கி பந்தலடி சென்று அங்கு அழுகளம் நிகழ்ச்சியில் திருநாங்கைகள் தங்கள் அணிந்திருந்த தாலியை அறுத்து வளையல்களை உடைத்து ஒப்பாரி வைத்து விதவை கோலம் பூண்டு சொந்த ஊருக்கு செல்வார்கள்.

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா


    Must Read : உதவி பேராசியர் மீது பாலியல், தீண்டாமை புகார்.. ஆதரவாக மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு : பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடரும் சர்ச்சை

    மறுநாள் சித்திரை 8 ஆம் (ஏப்ரல் 21) தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா பெருவிழா விமரிசையாக நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    செய்தியாளர் - எஸ்.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி
    Published by:Suresh V
    First published:

    Tags: Festival, Kallakurichi, Temple, Transgender

    அடுத்த செய்தி