Koovagam festival | கூத்தாண்டவர் கோவில் வாசலில் கற்பூரம் ஏற்றி வழிபட்ட திருநங்கைகள்

கூத்தாண்டவர் கோவில் வாசலில் நேற்று இரவு வழிபட்ட பக்கதர்களும் திருநங்கைகளும்

உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த தேர் திருவிழா கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதிலிருந்தும் வந்திருந்த நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கோவில் வாசலில் தங்களின் பாரம்பரிய  சம்பிர்தாயங்களோடு வழிபட்டு சென்றனர்.

  • Share this:
    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள கூவாகம் கிராமத்தில் இந்துக்களின் புராண நூல்களில் ஒன்றான மகாபாரதத்தை நினைவுறுத்தும் வகையில் கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். மகாபாரத  போரை குறிக்கும் வகையிலான சம்பிர்தாயங்களோடு சித்திரை மாதம் பெளர்ணமி தினத்தில் தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல்  பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சகணக்கான பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் பங்கேற்கும் இந்த திருவிழாவில் திருநங்கைகள் மணப்பெண் போல தங்களை அலங்கரித்து கொண்டு அரவானை வணங்கி கோவில் பூசாரியின் மூலம் தாலி கட்டி கொண்டு இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வர்.

    மேலும் படிக்க... போதிய ஆர்டர்கள் வராததால் ஜூஸ் கடை வைத்து பிழைக்கும் தொழில் முனைவோர்

    அதன்பின்னர் அதிகாலையில் தங்களது தாலியை துறந்து விதவை கோலத்தில் திரும்பி செல்லும் வழிபாட்டு முறை நடைபெறும். இந்நிலையில் தேர் திருவிழா கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றமடைந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள்  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்  மணப்பெண்களை போல் தங்களை ஒப்பனை  செய்து கொண்டு வந்து பூட்டபட்ட  கோவிலின் வாசலில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்தும் வழிபட்டு  சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: எஸ்.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Vaijayanthi S
    First published: