Home /News /tamil-nadu /

அடிக்கடி செல்போனில் பேச்சு: காதல் மனைவியை கொன்ற 2வது கணவர்!

அடிக்கடி செல்போனில் பேச்சு: காதல் மனைவியை கொன்ற 2வது கணவர்!

மனைவி கொலை

மனைவி கொலை

இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஐயப்பன்,  தனது மனைவி எழில் செல்விக்கு உடல் நிலை சரியில்லை எனவும், அவர் மயக்க நிலையில் உள்ளதாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு ஆட்டோ எடுத்து வருமாறும் நண்பரை வரவழைத்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எழில் செல்வியை கொண்டு சென்றுள்ளனர்

மேலும் படிக்கவும் ...
  உளுந்தூர்பேட்டை அருகே அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்த மனைவி மீது சந்தேகப்பட்டு 2வது கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த எழில் செல்வி, நைனார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால்  கடந்த 2018ம் ஆண்டு எழில் செல்வி வீட்டைவிட்டு ஓடிவந்து சிவாவை திருமணம் செய்துகொண்டார். இருவரும் நைனார் குப்பம் கிராமத்தில் வசித்து வந்தனர்.

  இவர்களுக்கு 2-வயதில் கன்சிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சிவாவுடன் லாரி ஓட்டுனராக பணிபுரியும்  ஒலையனூர் கிராமத்தைச்சேர்ந்த ஐயப்பன் என்பவர் சிவாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது ஐயப்பனுக்கும் எழிலரசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.   நாளடைவில் இருவரும் நீண்ட நேரம் பேசுவதும் சிவா சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு லாரி ஓட்டச் செல்லும் போது செல்போனில் பேசுவதும்,நேரில் சென்று பார்ப்பதுமாக இருந்த ஐய்யப்பன் ஆசை வார்த்தைகள் கூறியும் அன்பாக பேசியும் எழில் செல்வியை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

  இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன் எழில் செல்வி தனது குழந்தை கன்சிகா உடன் கணவரின் வீட்டை விட்டு வெளியேறி தனது  காதலன்  ஐயப்பனை 2 -வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரத்தில் ஒரு  வாடகை வீட்டில் தங்கி இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அவமானம் அடைந்த சிவா   சிவா தனது சொந்த ஊரை விட்டு தேனி மாவட்டம் கம்பத்திற்கு சென்று லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

  இந்த நிலையில் ஐயப்பன்  சென்னையில் உள்ள ஒரு பெட்ரோல்பங்கிற்கு லாரி  ஓட்டுனராக பணியில் சேர்ந்தார்.

  கடந்த மூன்றாம் தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஐயப்பன்,  தனது மனைவி எழில் செல்விக்கு உடல் நிலை சரியில்லை எனவும், அவர் மயக்க நிலையில் உள்ளதாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு ஆட்டோ எடுத்து வருமாறும் நண்பரை வரவழைத்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எழில் செல்வியை கொண்டு சென்றுள்ளனர்.

  எழில் செல்வியை பரிசோதித்த மருத்துவர்கள்  அவர் நான்கு, ஐந்து மணி நேரங்களுக்கு முன்பே கழுத்து இறுக்கப்பட்டு, காயங்களுடன் இறந்திருப்பதாக தெரிவித்தனர். மேலும், ஐயப்பன்  முன்னுக்கு பின் முரனான தகவல்களை கூறியதையும் அறிந்த மருத்துவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து ஐயப்பனை காவல் நிலையத்திற்கு அழைத்து  சென்று விசாரனை மேற்கொண்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை ஐயப்பன் தெரிவித்துள்ளார். அதன்படி,  தான் பணிக்கு செல்லும் போது ஒன்றிரண்டு முறை எழில் செல்விக்கு போன் செய்தால் பிசியாக வரும் எனவும் அதை தான் கண்டித்ததாகவும், ஏற்கனவே தன்னுடன் பேசியது போல் வேறு யாருடனாவது பேசுகிறாரோ? என சந்தேகமடைந்ததாகவும் ஐயப்பன் போலீசாரிடம் கூறியுள்ளார்.

  சம்பவத்தன்று இரவு போன் பிசியாக இருந்ததாகவும் தான் போனை பிடுங்கி பார்த்த போது நம்பர் அழிக்கப்பட்டிருந்ததாகவும்  எழில் அரசியிடம் கேட்டபோது மழுப்பலான பதிலை கூறியதாகவும்  தெரிவித்த ஐயப்பன், எழிலரசியின் செயலால் ஆத்திரமடைந்து, அவரது கழுத்தை இறுக்கி கேட்ட போது மூச்சு திணறி இறந்ததாக தெரிவித்தார்.

  இதனையடுத்து போலீசார் ஐயப்பனை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். செல்போனில் அதிகம் பேசிக்கொண்டிருந்ததால் காதல் மனைவியை 2வது கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

  செய்தியாளர்: செந்தில்குமார்- கள்ளக்குறிச்சி


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published:

  Tags: Husband Wife, Kallakurichi, Murder

  அடுத்த செய்தி