Home /News /tamil-nadu /

கமலின் ‘பாபநாசம்’ பட ஸ்டைலில் இளைஞர் கொன்று புதைப்பு.. கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்..

கமலின் ‘பாபநாசம்’ பட ஸ்டைலில் இளைஞர் கொன்று புதைப்பு.. கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்..

கமலின் பாபநாசம்

கமலின் பாபநாசம்

Kallakurichi District: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கமலின் பாபநாசம் பட பாணியில் வட மாநில இளைஞர் கொன்று வீட்டுக்குள் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பாபநாசம் பட பாணியில் வடமாநில இளைஞரைக் கொன்று தாங்கள் வேலை பார்த்த வீட்டிலேயே குழிதோண்டி புதைத்துச் சென்றுள்ளனர் இரு இளைஞர்கள்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அதே ஊரில் தனக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டிற்கு டைல்ஸ் போடும் வேலைக்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை சேத்தியா தோப்பில் இருந்து அழைத்து வந்தார். இவர்கள் ரமேஷ் கட்டி வரும் வீட்டின் மாடியில் தங்கி வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில், இந்த மூவரில் ஒருவர் மட்டும் கடந்த 4 நாட்களுக்கு முன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டார். மீதமிருந்த இருவரும் செவ்வாய்க்கிழமை மாயமானார்கள். இந்த நிலையில் ரமேஷ் கட்டி வரக்கூடிய புதிய வீட்டின் முன்பக்க காம்பவுண்டு சுவர் அருகே உறைந்த நிலையில் ரத்தம் கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த போலீசார் ரத்தம் உறைந்து கிடந்த இடத்தை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் தோண்டிப் பார்த்தனர்.

    Also read... அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 47 லட்சம் மோசடி செய்த மதுரை தம்பதி கைது..

    அப்போது மாயமான 2 வடமாநில இளைஞர்களில் ஒருவரான 22 வயதான பவன் குமார் என்பவரின் சடலம் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    உயிரிழந்தவரின் சடலத்தை வீட்டு உரிமையாளர் ரமேஷ் மற்றும் பவன் குமாரின் உறவினர் ஆகியோர் அடையாளம் காட்டினர். பவன் குமாரை தலையில் அடித்தும், கழுத்தை அறுத்தும் கொலை செய்திருப்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்தது. அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Crime News, Kallakurichi

    அடுத்த செய்தி