Home /News /tamil-nadu /

உணவு, மருந்துப் பொருட்கள் ஆன்லைன் வர்த்தகம் செய்வதை அடியோடு நிறுத்த வேண்டும் - விக்கிரமராஜா வலியுறுத்தல்

உணவு, மருந்துப் பொருட்கள் ஆன்லைன் வர்த்தகம் செய்வதை அடியோடு நிறுத்த வேண்டும் - விக்கிரமராஜா வலியுறுத்தல்

விக்கிரமராஜா

விக்கிரமராஜா

Kallakurichi : கள்ளக்குறிச்சியில் பேசிய அனைத்து வணிகர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் விக்கிரமராஜா, உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் ஆன்லைன் வர்த்தகம் செய்வதை அடியோடு நிறுத்த வேண்டும் என்றார்.

ஆன்லைன் வர்த்தகத்தில் வெளிநாடுகள் ஈடுபடுவதை தடை செய்ய மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றும், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் ஆன்லைன் வர்த்தகம் செய்வதை அடியோடு நிறுத்த வேண்டும் எனவும் கள்ளக்குறிச்சியில் அனைத்து வணிகர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

கள்ளக்குறிச்சியில் வணிகர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் விக்கிரம ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், வெளிநாடு சென்று தமிழகத்திற்கான முதலீடுகளை ஈட்டி வரும் தமிழக முதல்வருக்கு வணிகர் சங்கங்களின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

ஆன்லைன் வர்த்தகத்தை பொறுத்தவரை தற்பொழுது இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் வாயிலாக செயல்படுத்தி வருகிறோம். ஆனால், இந்த வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபடுவதை முற்றிலும் தடை செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

Must Read : ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமைகளாகும் இளைஞர்கள்.. தடை செய்ய முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் ஆன்லைன் வர்த்தகம் செய்வதை அடியோடு நிறுத்த வேண்டும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் இடமும் மத்திய அமைச்சர் இடமும் அழுத்தம் தர உள்ளோம் எனவும் கூறினார்.

செய்தியாளர் - எஸ் .செந்தில்குமார், கள்ளக்குறிச்சி.
Published by:Suresh V
First published:

Tags: Food, Kallakurichi, Online medicine

அடுத்த செய்தி