• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சொந்த வீட்டில் ஓட்டைப்பிரித்து திருடிய நபர் - மகனை கம்பி எண்ண வைத்த தாய்

சொந்த வீட்டில் ஓட்டைப்பிரித்து திருடிய நபர் - மகனை கம்பி எண்ண வைத்த தாய்

சொந்த வீட்டில் திருடிய நபர்

சொந்த வீட்டில் திருடிய நபர்

போலீஸாரின் விசாரணையில் சொந்த மகனே வீட்டில் திருடியது தெரியவந்தது.

  • Share this:
    சொந்த வீட்டிலேயே பணத்தை திருடிய  இளைஞரை  மோப்ப நாய் உதவியுடன் கைது செய்த போலிசார் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் வெங்கடாம்பேட்டை  பகுதியைச் சேர்ந்தவர்கள் சாவித்திரி செல்வராஜ் தம்பதி. இவர்களின்  வீட்டில்  கடந்த 25ஆம் தேதி  அதிகாலை ஏதோ சத்தம் கேட்டு  சாவித்திரி  எழுந்து பார்த்துள்ளார். அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டின் மேல் கூரையின் ஓட்டை பிரித்து வீட்டிற்குள் வந்தது தெரியவந்தது. இதனைக்கண்டு பதறிய சாவித்திரி எழுந்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.

    Also Read:  போலியான வலம்புரி சங்கு.. கோடிகளில் நடக்கவிருந்த மோசடி - அலர்ட்டான போலீஸ் சிக்கிய இடைத்தரகர்கள்

    வீட்டில் இருந்த பீரோ திறந்துகிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பீரோவை சோதனை செய்ததில் அதில் வைத்திருந்த சுமார் 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது. பீரோவில் வைத்திருந்த பணத்தை ஓட்டை பிரித்து உள்ளே வந்த மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.

    Also Read:  பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் தேவையற்றது - சீமான் அதிரடி

    இச்சம்பவம் குறித்து சாவித்திரி கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கச்சராபாளையம் உதவி காவல் ஆய்வாளர் ஏழுமலை தலைமையிலான போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் சாவித்திரியின் இரண்டாவது மகனான ஆனந்தராஜ் வீட்டில் கூரையை பிரிந்துக்கொண்டு உள்ளே வந்ததும்.தனது சொந்த வீட்டிலேயே சுமார் 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை திருடிய ஆனந்தராஜை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு சிறையில் அடைத்தனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: