மனைவியை கடித்த விஷப்பாம்பு.. வீட்டில் நடந்த கொள்ளை - விசாரிக்கும் போலீஸ்

மாதிரிப்படம்

வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்

 • Share this:
  கள்ளக்குறிச்சியில் ஓய்வு பெற்ற கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 25சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த அணைக்கட்டு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி.  இவர் ஓய்வு பெற்ற கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்.இவரது மனைவி தமிழரசி. கடந்த 15-ம் தேதி தங்களுக்கு சொந்தமான நிலத்தில் தமிழரசி வேலை செய்துக்கொண்டிருந்தார். அப்போது விஷப்பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

  Also Read:  நள்ளிரவில் கறிக்கோழி கேட்ட போலீஸ் - போனை எடுக்காத கறிக்கடைக்காரருக்கு அடி உதை

  தமிழரசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு உதவியாக கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையிலேயே  இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை திருவண்ணாமலையில் இருந்து தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உள்ளே சென்று பார்த்த போது உள்ளே அறைக்கதவும் உடைக்கப்பட்டு அங்கு பீரோவில் இருந்த துணிமணிகள் சிதறிக்கிடந்துள்ளது. மேலும் பீரோவில் இருந்த 25சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

  Also Read:  விமான நிலையத்தை உடைத்துக் கொண்டு உள்ளே ஓடும் பொதுமக்கள்.. உண்மை என்ன?

  இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விட்டு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைத்து தடயஙகளை சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: செந்தில்குமார்   உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: