டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்தவருக்கு மூக்கில் ரத்தம் - மதுப்பிரியர்கள் பீதி!

மதுப்பிரியர்

மூக்கில் ரத்தம் வந்ததால் பயந்துபோன செந்தில் சேல்ஸ்மேனிடம் கேட்டுள்ளார். ஆனால் அங்கு  வாக்குவாதம் ஏற்படவே பரபரப்பு நிலவியது.

 • Share this:
  அரசு மதுபானக் கடையில் மது வாங்கி குடித்த மதுப்பிரியருக்கு மூக்கில் ரத்தம் வந்ததால் குடிப்பிரியர்கள் பீதி அடைந்தனர்.

  கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்திற்குட்பட்ட  விருகாவூர்  கிராமத்தில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் முடியனுர் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை மகன் செந்தில் என்பவர் இன்று மதியம் ₹150 மதிப்புள்ள  மதுபானம் ஒன்றை வாங்கி குடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் மதுவை குடித்த உடனே மூக்கிலிருந்து ரத்தம் வருவதை கண்டு செந்தில் அச்சமடைந்து உள்ளார். மேலும் மற்றொரு சரக்கில் பாட்டில் குப்பை மற்றும் பூச்சி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

  Also Read: ‘11 நிமிடம் தான் பாலியல் வன்புணர்வு செய்தார்’: குற்றவாளிக்கு தண்டனையை குறைத்து ஷாக் கொடுத்த பெண் நீதிபதி!

  இதனால் பயந்துபோன செந்தில் சேல்ஸ்மேனிடம் கேட்டுள்ளார். ஆனால் அங்கு  வாக்குவாதம் ஏற்படவே பரபரப்பு நிலவியது. இதனால் வரஞ்சரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

  செந்தில்


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க மதுபான கடையை மூடி காவல்துறையினர் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் மூக்கில் ரத்தம் வந்ததால் செந்திலை கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

  செந்தில்குமார், செய்தியாளர் - கள்ளக்குறிச்சி
  Published by:Arun
  First published: