வேலையும் இல்ல.. விசாவும் தரல.. பஹ்ரைனில் உணவில்லாமல் தவிக்கும் தமிழர்கள் - தாயகம் திரும்ப அரசு உதவ கோரிக்கை
வேலையும் இல்ல.. விசாவும் தரல.. பஹ்ரைனில் உணவில்லாமல் தவிக்கும் தமிழர்கள் - தாயகம் திரும்ப அரசு உதவ கோரிக்கை
உணவில்லாமல் தவிக்கும் 2 தமிழர்கள்
பஹ்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்றவர்கள் சுமார் ஒரு வருடமாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் எங்கள் தாய் நாட்டிற்கு நாங்கள் செல்ல வேண்டும் எங்களுடைய விசாவை கொடுங்கள் என கேட்டுள்ளனர் விசாவையும் கொடுக்காமல் சுமார் இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக கண்ணீர்மல்க கூறுகின்றனர்.
பஹ்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் உணவு இல்லாமல் தவித்து வருவதாகவும், அரசு தாயகம் திரும்ப உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனங்கூர் கிராமத்தைச் ராஜா மற்றும் செல்லப்பிள்ளை ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைன் நாட்டிற்கு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றிருந்தனர். மேலும் இவர்கள் மட்டுமில்லாமல் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளவரசன் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் ராஜவேல், மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி ஆகிய 6 நபர்களும் வேலைக்காக சென்று இருந்தனர்.
அங்கு உள்ள தனியார் நிறுவனம் திடீரென எங்கள் நிறுவனத்தில் நீங்கள் வேலை லைசென்ஸ் தேதி முடிந்து விட்டது. இனிமேல் நீங்கள் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய முடியாது வேறு ஏதாவது வேலை இருந்தால் பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளது. இதனால் சுமார் ஒரு வருட காலமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பசியும் பட்டினியுமாகவும் தவித்து வருவதாக கூறுகின்றனர். மேலும் சுமார் ஒரு வருடமாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் எங்கள் தாய் நாட்டிற்கு நாங்கள் செல்ல வேண்டும் எங்களுடைய விசாவை கொடுங்கள் என கேட்டுள்ளனர் விசாவையும் கொடுக்காமல் சுமார் இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக கண்ணீர்மல்க கூறுகின்றனர்.
எனவே உடனடியாக சொந்த நாட்டிற்கு தமிழகம் திரும்ப இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் , தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் : செந்தில்குமார்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.