முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து விபத்து - இருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து விபத்து - இருவர் உயிரிழப்பு

விபத்து

விபத்து

வனப்பகுதியில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

கள்ளக்குறிச்சி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது கார் டயர் வெடித்து விபத்து இருவர் உயிரிழப்பு .

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நொனையவாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் பத்மாவதி, தனலட்சுமி சிவலிங்கம், வனசுந்தரி, ஜெயந்தி உள்ளிட்ட 10 பேர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கொங்கராயபாளையம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு பின்னர் வீடு திரும்பும்போது நின்னையூர் வனப்பகுதியில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 9 பேர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர். இதில் தனலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த 8 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வரஞ்சரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: எஸ் .செந்தில் குமார்  (கள்ளக்குறிச்சி)

First published:

Tags: Car accident, Died, Kallakurichi