ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை குறிவைத்து கொள்ளை.. சேசிங் கொள்ளையர்கள் இருவர் கைது

நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை குறிவைத்து கொள்ளை.. சேசிங் கொள்ளையர்கள் இருவர் கைது

சேசிங் கொள்ளையர்கள் கைது

சேசிங் கொள்ளையர்கள் கைது

Kallakkurichi : உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் டெம்போ டிராவலரில் 264 பவுன் நகை கொள்ளை போன வழக்கில் சேசிங் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களிடமிருந்து அறுபத்தி நான்கு பவுன் நகை மற்றும் டாட்டா ஏஸ், ஸ்கார்பியோ வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வரும் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்தினரோடு சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் நாகலாபுரத்தில் நடைபெறும் சுபநிகழ்ச்சிக்காக டெம்போ ட்ராவலர் வேன் மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேனின் மேற்பகுதியில் கட்டி எடுத்துச்சென்ற ஆறு சூட்கேஸ்களில் இரண்டு சூட்கேஸ்கள் காணாமல் போனதாகவும் அதில் 264 பவுன் நகைகள் இருந்ததாகவும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் காவல் நிலையத்தில் பெரியசாமி புகார் அளித்தார்.

  அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் 6 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். வேனில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்தி தேனீர் அருந்தி சென்ற பின்னர் விக்கிரவாண்டி அருகே உள்ள, பனையபுரம் பகுதியில் அதிகாலையில் வாகனத்திலிருந்து பெட்டிகள் மாயமானது தெரிவயவந்தது.

  இது குறித்து, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சிவரை உள்ள சாலையோர கடைகள் உணவகங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் டெம்போ ட்ராவலர் முதலில் நின்று தேநீர் அருந்திய பனையபுரம் உணவு விடுதியின் சிசிடிவி காட்சிகளில் ஒரு டாட்டா ஏஸ் வாகனமும் பதிவு எண் பலகை வைக்கப்படாத ஸ்கார்பியோ வாகனமும் இருந்ததும் டெம்போ ட்ராவலர் வேன் கிளம்பியவுடன் அந்த இரு வாகனங்களும் பின்தொடர்ந்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்தது.

  இதனையடுத்து காவல்துறையினர் டாட்டா ஏஸ் வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு அதன் உரிமையாளரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்திற்கு விரைந்து சென்ற 3 தனிப்படை போலீசார் வாடிப்பட்டி தாலுக்கா சோழவந்தான் பகுதியில் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர் .

  அப்பொழுது சோழவந்தான் அருகே உள்ள  குருவித்துறை என்ற இடத்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டிருந்தனர். காவல்துறையினரை அடையாளம் கண்டுகொண்ட நான்கு பேர் தப்பி ஓடிய நிலையில் குருவி துறையைச்சார்ந்த வினோத் என்கிற ஜஸ்டிஸ் வினோத் என்ற குற்றவாளியும், உசிலம்பட்டி தாலுகா கொடிக்குளம் அருகே உள்ள கொசவபட்டி கிராமத்தைச்சேர்ந்த முட்டி கணேசன் என்ற டாட்டா ஏஸ் வாகன ஓட்டுனரும்  போலீசாரிடம் சிக்கினர்.

  அவர்கள் இருவரையும் புகார் அளிக்கப்பட்ட திருநாவலூர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், மதுரையைச் சுற்றியுள்ள உசிலம்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 9 பேர் கொண்ட கும்பல் வெளிநாடுகள் சென்று வரும் வசதி படைத்தவர்கள் மற்றும் விமான பயணிகள் செல்லும் வாகனங்களை விமான நிலையத்திலிருந்து பின் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில்  துரத்தி சென்று சினிமா பாணியில் பணம், நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

  சேசிங் கொள்ளையர்கள் கைது

  சம்பவத்தன்று வெளிநாடு சென்று திரும்பிய பயணிகளின் வாகனங்கள் எதுவும் கண்ணில் தென்படாததால், பனையபுரம் அருகே தேநீர் குடித்துக் கொண்டிருந்ததாகவும் அப்பொழுது அதே கடையில் டெம்போ ட்ராவலரில் வந்தவர்கள், தேநீர் அருந்திய பொழுது வாகனத்தின் மேலே கட்டப்பட்டிருந்த ஆறு சூட்கேஸ்களில் நகைகள் உள்ள இரண்டு சூட்கேஸ்களில் பூட்டு போட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

  Read More : இளையராஜா பாவம்.. ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் அவரை சந்தித்து இருப்பார்கள் என நினைக்கிறன்.. திருமாவளவன்

  இதை நோட்டமிட்டு, அந்த வாகனத்தை பின் தொடர்ந்து வேனின் முன்பு ஸ்கார்பியோ கார் முந்திச் செல்வது போல் போக்குக் காட்டி வண்டியின் வேகத்தை குறைத்து டாட்டா ஏஸ் வாகனத்தில் வந்த மற்றவர்கள் வேனின் மீது ஏரி சூட்கேஸ்களை எடுத்து, டாட்டா ஏஸ் வாகனத்தில் போட்டுவிட்டு உளுந்தூர்பேட்டை கெடிலம் அருகே மீண்டும் ஸ்கார்பியோ கார் மூலம் முந்திச்சென்று வேகத்தை கட்டுப்படுத்தி மேலே இருந்த கொள்ளையர்கள் கீழே இறங்கி டாட்டா ஏஸ் வாகனத்தில் பண்ருட்டி வழியாக தப்பிச் சென்றுள்ளனர் என்பதும் தெரியவந்தது.

  Must Read : பாஜக- விடுதலை சிறுத்தைகள் மோதல்: காயத்ரி ரகுராம் உட்பட 150 பேர் வழக்குப் பதிவு

  இதனையடுத்து போலீசார் அவர்களிடமிருந்த 264 பவுன் நகைகள் மற்றும் டாட்டா ஏஸ், ஸ்கார்பியோ வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர் - எஸ்.செந்தில்குமார் -கள்ளக்குறிச்சி

  Published by:Suresh V
  First published:

  Tags: Gold Robbery, Ulundurpet