முகப்பு /செய்தி /தமிழ்நாடு / செல்ஃபி எடுக்கும்போது அருவியில் தவறி விழுந்த சிறுவன்.. இரண்டாவது நாளாக தேடும் பணி தீவிரம்

செல்ஃபி எடுக்கும்போது அருவியில் தவறி விழுந்த சிறுவன்.. இரண்டாவது நாளாக தேடும் பணி தீவிரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

அருவியில் தவறி விழுந்த சிறுவனை தேடும் பணியில் இரண்டாவது நாளாக தீயணைப்புதுறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

  • Last Updated :

கல்வராயன்மலை சிறுகலூர் அருவியில் குளிக்க சென்ற சிறுவன் செல்பி எடுக்க முயன்ற போது தவறி விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள சிறுகலூர் அருவிக்கு குளிப்பதற்காக  வாணாபுரம் பகுதித்தை சேர்ந்த சதீஷ், வெங்கடேஷ், பூமிநாதன், சுரேஷ் ஆகிய நான்கு பேரும் சென்றுள்ளனர். அப்போது சுரேஷ் என்ற 12 வயது சிறுவன் செல்பி எடுப்பதற்காக ஆற்றை கடக்க முயன்ற நிலையில் சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் அருவியில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டிருந்தது.

தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் நிலைதடுமாறிய சுரேஷ் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.இது குறித்து தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு துறையினர் அச்சிறுவனை தேடும் பணியில் நேற்று காலை முதல் ஈடுபட்டு வந்த நிலையில் மாலை நேரத்தில்  போதிய வெளிச்சம் இல்லாத வனப்பகுதி என்பதால் மீட்பு பணிகளை தொடரமுடியவில்லை. இந்நிலையில் இன்று காலை முதல் சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர்: எஸ். செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி)

First published:

Tags: Falls, Heavy rain, Rain updates, Selfie, Selfie death